நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை மட்டுமல்ல இதுவரை இடம்பெற்ற அனைத்துக் கொலைகளுக்குமே அரசாங்கம் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை. அதை நாம் எதிர்பார்க்கவுமிலை எனத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு 4 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு அவரிடம் கருத்துக் கேட்ட போதே எமது இணையத்தளத்துக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் 2005ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட படுகொலைச் சம்பவங்கள் குறித்து இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கையுயும் எடுத்ததாகத் தெரியவில்லை.
கொலையாளிகள் குறித்த தகவல்களை நாம் ஜனாதிபதிக்கு தெரிவித்தும் கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மனோ கணேசன்
மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபகரும், யாழ் மாவட்ட எம்பியுமான எனது நண்பர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் செய்யப்பட்டு நாளையுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இந்த நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எத்தனை பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகொண்டு ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
2006ஆம் வருடம் நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட எம்பியும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபகருமான நடராஜா ரவிராஜின் நினைவு தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’