வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
முத்தையா முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தையா முரளிதரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 27 மார்ச், 2013

மற்றொரு போர்ச் சூழலை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை: முரளி



இலங்கையில் கடந்த காலங்களில் போர்ச்சூழல் இருந்தது. ஆனால் தற்போது தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவே வாழ்கின்றனர். இதனை இந்திய அதிகாரிகள் இலங்கையில் தமிழர்களாகிய நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை வந்து பார்க்க வேண்டும்' என்று இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சனி, 13 அக்டோபர், 2012

ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டோருக்கு வாழ்நாள்தடை விதிக்கப்பட வேண்டும்: முரளி


ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டோரை வாழ்நாள் முழுவதும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சனி, 16 ஏப்ரல், 2011

இலங்கை கிரிக்கெட் சபையை சாடுகிறார் முரளிதரன்

வீ ரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை.

வியாழன், 7 ஏப்ரல், 2011

இங்கிலாந்தில் விளையாட முரளிக்கு விஸா கிடைத்தது

பி ரித்தானிய புதிய விஸா விதிகள் குறித்து கவலை கொண்டிருந்த இலங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இங்கிலாந்து பிராந்திய அணியில் விளையாடுவதற்கான பிரித்தானிய தொழில் அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக அவரின் முகாமையாளர் குஷில் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

பரீட்சைக்கும் கணினிக்கும் முரளி பயம்: இங்கிலாந்தில் விளையாட அனுமதி பெறுவதில் சிக்கல்

இ லங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், இவ்வருடம் இங்கிலாந்து பிராந்திய போட்டிகளில் விளையாடுவதற்கான விஸா பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகிறார். கணினி மற்றும் பரீட்சை குறித்து அவருக்குள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

எனது வாழ்க்கையின் மிக முக்கிய போட்டி ; நான் விளையாடுவேன்: முரளி

நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப்போட்டி தனது வாழ்க்கையின் மிக முக்கியமான போட்டி எனத் தெரிவித்துள்ள இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்,

திங்கள், 14 பிப்ரவரி, 2011

முத்தையா முரளிதரனின் சுயசரிதை '800'

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் கிரிக்கெட் வரலாற்றில் முன்னணியில் திகழ்பவருமான முத்தையா முரளிதரன் சுயசரிதை எழுத ஆரம்பித்துள்ளதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இப்புத்தகம் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 5 ஜனவரி, 2011

வரலாற்றின் மிகச் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியில் முரளிதரன்

வ ரலாற்றின் மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியில் உலக சாதனை பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இடம்பெற்றுள்ளார். இவ்வணியில் இடம்பெற்ற ஒரேயொரு இலங்கை வீரர் முரளிதரன் ஆவார்.

புதன், 24 நவம்பர், 2010

ஜனாதிபதியை முரளி மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

சர்வதேச நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

முரளிதரனை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்படவுள்ளது

இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செவ்வாய், 27 ஜூலை, 2010

முரளிதரன் தமிழ்ப் புலி! பாக். பத்திரிகை வர்ணிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 அதிகபடியான விக்கெட் டுக்களை வீழ்த்தியவர் என்கிற சர்வதேச சாதனையை நிலை நாட்டியிருக்கும் இலங்கையின் உலகப் புகழ் வாய்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தமிழ்ப் புலி என்று வர்ணித்து பாகிஸ்தானின் பிரபல ஆங்கில தினசரிப் பத்திரிகை களில் ஒன்றான த ரைம்ஸ் நேற்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. அந்த ஆசிரியர் தலையங்கத்தில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,

வியாழன், 22 ஜூலை, 2010

800 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் முரளி. வீடியோ இணைப்பு

உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 800 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். காலியில் நடைபெறும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஓஜாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது 800 ஆவது விக்கெட்டை முரளி வீழ்த்தினார்.

சாதனைத்,தமிழன்,எங்கள் இலங்கைத்தீவில் கிடைத்த முத்து முத்தையா முரளிதரனுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் புகைப்படங்கள் இணைப்பு

இலங்கையின் நட்சத்திரச் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 800 வது விக்கெட்டினைச் சற்று முன்னர் கைப்பற்றினார்.
இந்தியாவுக்கெதிராகக் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிலைநாட்டினார்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

இரண்டு சதங்களுடன் இலங்கை அணி அசத்தல்





இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நேற்றிரவு காலியில் மழை பெய்ததால் இன்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பித்தது.

செவ்வாய், 6 ஜூலை, 2010

காலி டெஸ்ட் போட்டியுடன் முரளி ஓய்வு

காலியில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

புதன், 23 ஜூன், 2010

ஆசியா கிண்ண இறுதிப்போட்டியில் முத்தையா முரளிதரன் விளையாடுவாரா?

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையில் நாளை நடைபெறவுள்ள ஆசியா கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் தான் விளையாட வேண்டும் என முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் இணையதளத்திற்கு தெரிவித்தன.

திங்கள், 3 மே, 2010

தொடரும் உலகக்கிண்ண போட்டிகளில் முத்தையா முரளிதரன் இல்லை

இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்க மாட்டார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக முத்தையா முரளிதரனுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓயவு தேவை என வைத்தியர்களின் ஆலோசனையின் காரணமாகவே அவர் இனி வரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 4 மார்ச், 2010

ஜோன் ஹவாட் கருத்து குறித்து நான் கோவப்படவோ ஏமாறவோ இல்லை; முரளிதரன்


அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவர்ட் கருத்து குறித்து நான்மாற்றம் அடையவோ, கோபப்படவோ இல்லை. அந்த நேரம் என்னுடையதாக இல்லை. ஆனால் இப்போது எல்லாம் முடிந்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு வரவுள்ள அவர், ஏனைய நாட்டு வீரர்களை,எவ்வறு நடத்தப்போகிறார் என்று பார்க்க வேண்டும். இது எளிதானது அல்ல

முரளிதரனின் "தூஸ்ரா' பந்து வீச்சு குறித்து கடந்த 2004ல் அவர் மேற்கொண்ட பகிடிவதை குறித்து முரளிதரன் கருத்து தெரிவித்தார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து, இந்த ஆண்டு இறுதியில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையாமுரளிதரன், ஓய்வுபெற முடிவு செய்துள்ளார்.தனது கிரிக்கெட் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (37). இதுவரை 132 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 792 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 334 ஒருநாள் போட்டிகளில் 512 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.சுமார் 18 வருடங்களாக விளையடி வரும் இவர், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஒக்டோபரில், மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இதில் தான் 800 ஆவது விக்கெட் வீழ்த்த வேண்டும் அதன் பின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். மேலும் இந்தியாவில் நடக்கும் உலக கிண்ணப் போட்டி (50 ஓவர்கள்) தொடருடன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விலகவுள்ளார்.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட்களுடன், மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான் எனது கடைசி தொடராக இருக்கும். அடுத்து உலக கோப்பை தொடர் வரைக்கும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன். மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் நான் உட்பட, இலங்கை வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்பார்கள். ஒருவேளை இதில் கலந்து கொள்ளவில்லை என்றால் தான் அது மோசம் எனவும் அவ்ர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

தேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...?


இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உத்தியோகபூர்வமற்ற முறையில் வீரகேசரி இணையத்தளத்துக்கு இத்தகவலை வழங்கினார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மாத்தறை மாவட்டத்திலும் நட்சத்திர ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க கேகாலை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.