வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 மார்ச், 2013

மற்றொரு போர்ச் சூழலை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை: முரளி



லங்கையில் கடந்த காலங்களில் போர்ச்சூழல் இருந்தது. ஆனால் தற்போது தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவே வாழ்கின்றனர். இதனை இந்திய அதிகாரிகள் இலங்கையில் தமிழர்களாகிய நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை வந்து பார்க்க வேண்டும்' என்று இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'கடந்த காலத்தில் நடந்ததை மறக்க வேண்டும். தற்போதைய நிலையில் மற்றொரு போர்ச்சூழலை இலங்கைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள முரளிதரன், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை வருத்தமளிக்கிறது' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியன் பிரீமியர்லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் 6ஆவது சீசனில், சென்னையில் நடைபெற உள்ள லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடும் முரளிதரன் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 'இது கிரிக்கெட்டிற்கு வருத்தமான நாள்' என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், 'இது அரசின் முடிவு என்னும் போது அரசே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்னும் நிலையில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருப்பதே நல்லது' என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து மேலும் கருத்து கூறிய முரளிதரன், 'இலங்கை தமிழராகிய தாம் கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடியுள்ளதாகவும், ஒரு தமிழனாக இலங்கையில் தமக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'தாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த சமயங்களில் இலங்கை அரசும், இலங்கை கிரிக்கெட் சபையும் தமக்கு ஆதரவாகதான் செயல்பட்டன' என்றும் அவர் கூறியுள்ளார். 'கடந்த காலங்களில் போர்ச்சூழல் இருந்தது. ஆனால் தற்போது தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவே வாழ்வதாக' முரளிதரன் கூறியுள்ளார். 'எனவே இந்திய அதிகாரிகள் இலங்கையில் தமிழர்களாகிய நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை வந்து பார்க்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 'கடந்த காலத்தில் நடந்ததை மறக்க வேண்டும் என்றும் தற்போதைய நிலையில் மற்றொரு போர்ச்சூழலை தமிழர்கள் விரும்பவில்லை' என்றும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். 'எங்களை அனுமதித்தால் நாங்கள் மறுக்காமல் சென்னையில் விளையாடுவோம் என்றும் சென்னை தமக்கு இரண்டாவது வீடு. ரசிகர்களுக்காக மட்டுமே நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம்' என்று அவர் மேலும் கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’