வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 மார்ச், 2013

முஸ்லிம், கிறிஸ்தவ சபை அடிப்படைவாதத்திற்கு நாட்டில் இடமளிக்கவே முடியாது: பொதுபல சேனா


கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பில் எம் மீது குற்றம் சுமத்தப்படுவதை நிராகரிக்கின்றோம் என்று பொதுபல சேனாவின் நிறைவேற்று குழு உறுப்பினர் விலந்த விதானகே தெரிவித்தார்.
ஆனால் நாட்டில் முஸ்லிம் கிறிஸ்தவ சபை அடிப்படைவாதத்திற்கு இடமளிக்க முடியாது. அதனை தடுத்து நிறுத்துவோம் என்றும் கூறினார். இதுதொடர்பாக லிலந்த விதானகே மேலும் தெரிவிக்கையில், தத்தமது மத அனுஷ்டானங்கள் மக்கள் மேற்கொள்ள முடியும். அதில் தலையிட எவருக்கும் அதிகாரம் இல்லை. அதேபோன்று தத்தமது மதங்களை மதிப்பது போன்று ஏனைய மதங்களையும் மதிக்கும் மனோபாவம் அனைவரிடமும் இருக்க வேண்டும். பொதுபல சேனா உருவாகுவதற்கு முன்பு பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகளுடன் எமக்கு இணக்கப்பாடு கிடையாது. மன்னாரில் அந்தோனியார் திருச்சுரூபம் உடைப்பு, தேவாலயத்திற்கு மலம் வீசப்பட்ட சம்பவத்தை நாம் கண்டிக்கிறோம். எமது மதத்தை மதிப்பது போன்று அனைத்து மதங்களையும் மனப் பக்குவம் அனைவர் மத்தியிலும் ஏற்பட வேண்டும். ஆனால் கிறிஸ்தவ சபை, முஸ்லிம் அடிப்படை வாதத்திற்கு இடமளிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் ஹர்தால் ஒன்றை நடத்தியுள்ளனர். இது முஸ்லிம் அடிப்படை வாதத்திற்கு துணை போகும் செயலாகும் என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’