இ லங்கையின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன், இவ்வருடம் இங்கிலாந்து பிராந்திய போட்டிகளில் விளையாடுவதற்கான விஸா பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குகிறார். கணினி மற்றும் பரீட்சை குறித்து அவருக்குள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.
இங்கிலாந்தின் குளோசெஸ்டஷயர் பிராந்திய அணிக்காக எதிர்வரும் ஜுன் மாதம் விளையாட முரளிதரன் திட்டமிட்டுள்ளார்.
எனினும், பிரித்தானிய தொழில் விஸா பெறுவதற்கு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளின்படி முரளிதரன் இங்கிலாந்தில் விளையாடுவதற்கான அனுமதி பெற வேண்டுமானால் அவர் தனது ஆங்கில மொழித்திறமையை வெளிப்படுத்துவதற்கான பரீட்சையொன்றை கணினி மூலம் எழுத வேண்டும்.
'2013 ஆம் ஆண்டு வரையான பயண விஸாவை நான் கொண்டுள்ளேன். ஆனால் அங்கு வேலை செய்வதற்கு பரீட்சையொன்றை எழுத வேண்டும்' என முரளிதரன் செய்தியாளர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார். கணினி குறித்து தான் அச்சமடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
'எனக்கு கணினியை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாது' என்றார் அவர்.
அவர் பயப்படுவது பரீட்சைக்காக, கணினிக்கா என கேட்டபோது, இரண்டும் என முரளி பதிலளித்தார்.
'இறுதியாக நான் 1988 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி 6 பாடங்களில் சித்தி பெற்றேன்.அதன்பின் நான் பாடசாலையைவிட்டு விலகினேன். பின்னர் கிரிக்கெட் விளையாடுவதையே நான் விரும்பினேன்' என்றார் முரளி.
இம்மாதம் தனது 39 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள முரளிதரன் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் அவர் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
குணினிகள் மீது முரளி அச்சம் கொண்டிரந்தாலும் ஆயிரக்கணக்கான சிறார்கள் தகவல் தொழில்நுட்பக் கல்வியை பெறுவதற்கு முரளி உதவுகிறார். அவர் நடத்தும் பல நலநிதியங்கள் தகவல் தொழில்நுட்பக் கல்வி, பாடசாலைகளை இயக்குதல், வறிய சிறார்களுக்கு புத்தங்கள் சீருடைகள் முதலானவற்றை விநியோகித்தல் என்பனவற்றுக்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
20,000 சிறார்களுக்கு பாடசாலை புத்தகங்கள், சீருடைகள், பாதணிகள், மற்றும் பொருட்களை விநியோகிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் எனக்கு 100,000 அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது' என முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
வெளிநாட்டிலள்ள தமிழ் மக்களிடமும் நலன் விரும்பிகளிடமும் நிதி திரட்டுவதற்காக அவுஸ்திரேலியா, மலேஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’