இலங்கை கிரிக்கெட் துறை வளச்சிக்கு பாரிய பங்களிப்பு நல்கிய சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை கௌரவித்து விட பரிசு ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் நேற்று சந்தித்த போதே முரளிதரன் தம்பதியினரிடம் இப் பரிசு கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 20 மில்லியன் இலங்கையர்கள் 1.2 பில்லியன் இந்தியர்களை சந்தோசப்படுத்துவதற்காக இலங்கையர்கள் ஒரு படி பின்வாங்கியுள்ளார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடி நாடு திரும்பிய இலங்கை அணி வீரர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், உலகக் கிண்ணத்தை வென்றாலும், வெல்ல முடியாவிட்டாலும் இறுதிப் போட்டிவரை சென்றது ஒரு சாதனையாகும். அந்த வகையில் நீங்கள் எங்களை பெருமைப் படுத்துவீர்கள் என்றார்.
இந்திய அணி முதல் தடவையாக 1983 ஆம் ஆண்டு கப்பில் தேவ் தலைமையில் உலகக் கிண்ணத்தை வென்று எடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, விளையாட்டு துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’