வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆராய்வு

பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படவேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்ந்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று கொழும்பிலுள்ள அமைச்சின் செயலகத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதியமைச்சர் வீரக்குமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆலோசகர் திருமதி வி.ஜெகராசசிங்கம் உள்ளிட்டோருடன் துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை தேசிய வடிவமைப்புச் சபை தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் பனை அபிவிருத்திச் சபை உள்ளிட்டவற்றின் செயற்பாட்டறிக்கைகள் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அங்கு அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் எமது அமைச்சில் முறைகேடுகளோ துஸ்பிரயோகங்களோ ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு துறைசார்ந்த அதிகாரிகளின் கடமையாகும். அதற்கு எல்லோரது ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமானது என்றும் தெரிவித்தார்.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’