ஒரு நாள் மற்றும் இருபது இருபது ஆட்டங்களுக்கான இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக குமார் சங்கக்கார அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவியது அணித்தலைவர் குமார் சங்க்காரவுக்கு உண்மையில் மிக கசப்பான அனுபவம் என்ற போதிலும் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாகவே அவர் இந்த இந்த தீர்மானத்தை எடுத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 20-20 போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாகவும் அடுத்துவரும் இங்கிலாந்து மற்றும் ஒஸ்ட்ரேலிய அணிகளுடனான டெஸ்ட் தொடர்களுக்கு வேண்டுமானால் அணித் தலைவராக ஒரு இடைக்காலத்துக்கு இருக்க சம்மதம் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துவிட்டார்.
அடுத்த தலைவர் யார்?
33 வயதான குமார் சங்க்ககார 2015இல் ஒஸ்ட்ரேலியாவில் நடைபெறவுள்ள அடுத்த உலகக்கிண்ணத் தொடருக்கு புதிய இளம் தலைவர் ஒருவர் தேவைப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது இடத்தை யார் நிரப்பமுடியும் என்பதற்கு உடனடியான பதிலொன்று இல்லாமலேயே சங்கக்கார பதவி விலகுகிறார்.
சகல துறை ஆட்டக்காரர் அங்கலோ மெத்தீவ்ஸ் இன் பெயர் பரவலாக அடிபடுகிறது. ஆனால் அவருக்கு இப்போது தான் 23 வயது. அத்தோடு அந்தளவுக்கு அனுபவம் உள்ளவர் என்றும் கூறமுடியாது.
இன்னொரு தெரிவென்று பார்த்தால், இம்முறை உலகக் கிண்ணப்போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்தவரும் முன்னர் தலைவராக இருந்த அனுபவம் உள்ளவருமான திலக்கரட்ண டில்ஷானைக் கூற முடியும். ஆனால் அவர் சங்கக்காரவை விட வயதில் மூத்தவர்.
சங்காவின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’