வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

சோனியா: தமிழர் பிரச்சினைக்கு முன்னுரிமை

கில இந்திய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தியும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.
சோனியா காந்தி தமிழகத்தை முற்போக்கு மாநிலம் என்று வர்ணித்து, கருணாநிதியின் தலைமைக்கு புகழாரம் சூட்டி, அவர் தலைமையில் மாநிலம் முன்னேறி வருவதாலேயே திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியைத் தொடர்கிறது என்றார்.


தேர்தல் பிரச்சாரம் என்றாலும் முதல்வர் கருணாநிதி தென்னக நதிநீர் இணைப்பு, முல்லைப் பெரியார் பிரச்சினையில் தமிழகத்திற்கு நீதி, தலித் கிறித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும் முதல்வர் கருணாநிதி தனது கவலையைத் தெரிவித்தார். பதிலுக்கு சோனியா காந்தி, அண்டை நாடுகள் பிரச்சினைகளிலேயே இலங்கைத் தமிழர் பிரச்சினையில்தான் மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருவதாகவும், இடம்பெயர்ந்த தமிழர் மீள்குடியேற்றத்திற்காக அதிக அளவில் நிதி உதவி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
மேலும் தமிழர்கள் அனைத்து உரிமைகளுடன் கண்ணியமாக தலைநிமிர்ந்து வாழும் வகையில் தேவையான மாற்றங்களை அரசியல் சட்டத்தில் செய்யவேண்டுமென்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி வருவதாகவும், இப்பிரச்சினையில் தன்னால் இயன்ற அனைத்தையும் இந்தியா செய்யும் என்றும் சோனியா காந்தி உறுதியளித்தார்.
கருணாநிதி கச்சத்தீவு பிரச்சினை பற்றியும் குறிப்பிட்டார். பதிலுக்கு சோனியா காந்தி தமிழக மீனவர்கள் சுடப்படமாட்டார்கள் என்று இலங்கை வாக்களித்திருப்பதாகவும், அவ்வாக்குறுதி மீறப்படாமல் இருக்க இந்தியா ஆவன செய்யும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக பாண்டிச்சேரியிலும் அவர் தேர்த்ல் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு கேரளா சென்றார் சோனிய காந்தி.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’