வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

இலங்கைத் தமிழர்களின் அடிமை நிலையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை

.தி.மு.க. ஆட்சி அமைத்தால், இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அண்ணாநகர் பிரதான வீதியில் வாகனத்திலிருந்த வாறு பிரசாரம் செய்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தி.மு.க ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை ரூ.1 லட்சம் கோடி கடனாளியாக்கிவிட்டார் கருணாநிதி.
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் கச்சதீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயந்திர படகுகள் வாங்க மானியம் வழங்கப்படும். 13 இடங்களில் மீன் பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும். மீன்பிடிக்க விலக்கு அளி க்கப்பட்டுள்ள 45 நாள் தடைக் காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும். பருவகாலத்தில் 4 மாதங்களுக்கு மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள இயலாத சூழ் நிலையில் மீனவக் குடும்பங்களுக்கு ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் கௌரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப் படும். இலவச திட்டங்கள் இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களுக்கும் நீட்டிக்கப் படும். அதேபோல், இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகள் போல் வாழும் நிலையை மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’