
அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் ஜோன் ஹவர்ட் கருத்து குறித்து நான்மாற்றம் அடையவோ, கோபப்படவோ இல்லை. அந்த நேரம் என்னுடையதாக இல்லை. ஆனால் இப்போது எல்லாம் முடிந்து விட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவிக்கு வரவுள்ள அவர், ஏனைய நாட்டு வீரர்களை,எவ்வறு நடத்தப்போகிறார் என்று பார்க்க வேண்டும். இது எளிதானது அல்ல
முரளிதரனின் "தூஸ்ரா' பந்து வீச்சு குறித்து கடந்த 2004ல் அவர் மேற்கொண்ட பகிடிவதை குறித்து முரளிதரன் கருத்து தெரிவித்தார்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து, இந்த ஆண்டு இறுதியில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையாமுரளிதரன், ஓய்வுபெற முடிவு செய்துள்ளார்.தனது கிரிக்கெட் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (37). இதுவரை 132 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 792 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 334 ஒருநாள் போட்டிகளில் 512 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.சுமார் 18 வருடங்களாக விளையடி வரும் இவர், சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு ஒக்டோபரில், மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இதில் தான் 800 ஆவது விக்கெட் வீழ்த்த வேண்டும் அதன் பின் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். மேலும் இந்தியாவில் நடக்கும் உலக கிண்ணப் போட்டி (50 ஓவர்கள்) தொடருடன் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விலகவுள்ளார்.
இன்னும் ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட்களுடன், மேற்கிந்திய தீவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான் எனது கடைசி தொடராக இருக்கும். அடுத்து உலக கோப்பை தொடர் வரைக்கும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன். மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் நான் உட்பட, இலங்கை வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்பார்கள். ஒருவேளை இதில் கலந்து கொள்ளவில்லை என்றால் தான் அது மோசம் எனவும் அவ்ர் மேலும் தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’