காலியில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியுடன் இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஓய்வு பெறவுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.
முத்தையா முரளிதரன் தேசிய கிரிக்கெட் தேர்வாளர்கள் இலங்கைக் கிரிக்கெட் சபை அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்க ஆகியோரின் ஆசிகளையும் அவர் பெற்றுக்கொண்டார் என இலங்கைக் கிரிக்கெட் சபை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’