ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டோரை வாழ்நாள் முழுவதும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் டுவென்டி டுவென்டி போட்டியின் போது இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்கள் உட்பட பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 6 கிரிக்கெட் நடுவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு தவறான தீர்ப்புக்களையும் போட்டி பற்றிய தகவல்களையும் வழங்குவதற்குத் தயாராக இருந்தார்கள் என இந்திய தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டிருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த நதீப் கௌரி மற்றும் அனீஸ் சித்திக், பங்களாதேஷைச் சேர்ந்த நதீர் சாஹா, இலங்கையைச் சேர்ந்த காமினி திஸாநாயக்கா, மௌரிஷ் வின்ஸ்டன் மற்றும் சாகர கால்லகே ஆகியோரே மேற்படி ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’