வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 13 அக்டோபர், 2012

இலங்கையை பாராட்டிய யுனிசெப்



கிராமிய சமூகங்களின் சமூகநல மேம்பாட்டுக்கான இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலய பணிப்பாளர் கெரின் ஹல்சொப், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, சிறுவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக சிறுவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைத்தல் மற்றும் கிராமப்புற குழந்தைகளின் சுகாதார மேம்பாடு குறித்து அவர் ஜனாதிபதியிடம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளில் சிறுவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் சுகாதார முன்னெடுப்புக்களை ஆராயும் வகையில் கெரின் ஹல்சொப்பின் இலங்கைக்கான விஜயம் அமையப்பெற்றுள்ளது.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் யுனிசெப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரெஸ் ஹொஸ்ஸய்னி, ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’