வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 ஜூலை, 2010

இரண்டு சதங்களுடன் இலங்கை அணி அசத்தல்





இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. நேற்றிரவு காலியில் மழை பெய்ததால் இன்றைய போட்டி சற்று தாமதமாகவே ஆரம்பித்தது.
உலகப் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் இறுதி டெஸ்ட் போட்டி என்பதால் அவருக்கு பரிசாக தமது அணி வெற்றியினையே பெற்றுக்கொடுக்க விரும்புகிறது என அணியின் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதற்கமைய இலங்கை அணியினர் இன்றைய முதலாம் நாள் ஆட்டத்தில் மிகவும் அபாரமாக விளையாடினர்.
வழமைபோல் இன்றைய போட்டியிலும் டில்ஸான் அவ்வளவாக ஓட்டம் குவிக்கவில்லை. பரணவிதாரணவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்ஸான் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அணித்தலைவர் சங்கக்கார களமிறங்கினார். இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை இரண்டு வீரர்களும் பக்குவமாக கையாண்டார்கள்.
ஏலவே குமார் சங்கக்கார குறிப்பிட்டதுபோல் இன்றைய போட்டி மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது. அதற்கமைய தனது 22ஆவது டெஸ்ட் சதத்தினைப் குமார் சங்கக்கார பெற்றுக் கொண்டார். இந்திய அணிக்கெதிராக அவர் பெறும் 4ஆவது சதம் இது. அதனைத் தொடர்ந்து 103 ஆட்டங்களுடன் சங்கக்கார ஆட்டமிழக்க, மஹேல ஜயவர்த்தன பரணவிதாரணவுடன் ஜோடி சேர்ந்தார்.
மிகவும் நிதானமாக விளையாடிய பரணவிதாரண தனது டெஸ்ட் கன்னி சதத்தினைப் பெற்றுக்கொண்டார். இன்றைய முதலாம்நாள் ஆட்டநேர முடிவின்போது பரணவிதாரண ஆட்டமிழக்காமல் 110 ஓட்டங்களுடனும் மஹேல ஜயவர்த்தன ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கின்றனர். இலங்கை அணி மொத்தமாக இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ஓட்டங்களுடன் நாளைய போட்டியினை தொடரவுள்ளது.
இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன்னர் மத்தியமாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி வைத்தமை சிறப்பம்சமாகும்.
இந்த டெஸ்ட் போட்டி முத்தையா முரளிதரனின் இறுதிப் போட்டி என்பது தெரிந்ததே. அதேபோல் இந்திய அணியின் மிதுன் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டியாகும். அதாவது மிதுனின் கன்னி டெஸ்ட் போட்டி இது. இப்போட்டியில் மிதுன் தனது கன்னி விக்கெட்டினையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’