வ ரலாற்றின் மிகச்சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியில் உலக சாதனை பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இடம்பெற்றுள்ளார். இவ்வணியில் இடம்பெற்ற ஒரேயொரு இலங்கை வீரர் முரளிதரன் ஆவார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்போட்டி ஆரம்பமாகி 40 வருடங்கள் இன்றுடன் பூர்த்தியடைவதை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.சி.சி.) இவ்வணியை தெரிவிவுசெய்துள்ளது.
இவ்வணியின் ஒரேயோரு சுழற்பந்துவீச்சாளராக முரளிதரன் சேர்க்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வோர்ன் இவ்வணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தளம் மூலம் நடத்தப்பட்ட இவ்வாக்கெடுப்பில் 97 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சம் பேர் பங்குபற்றியுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா, இந்தியாவைச் சேர்ந்த 3 வீரர்களும் மேற்கிந்திய வீரர்கள் இருவரும், இலங்கை, பாகிஸ்தான், தென்hனபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒருவரும் இவ்வணியில் இடம்பெற்றுள்ளனர் .
விபரம்:
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்: சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவாக்,
மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள்: பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கிபொன்டிங்.
சகலதுறை வீரர்: கபில் தேவ்.
விக்கெட் காப்பாளர்: அடம் கில்கிறிஸ்ட்
சுழற்பந்துவீச்சாளர்: முத்தையா முரளிதரன்.
வேகப்பந்துவீச்சாளர்கள்: வஸிம் அக்ரம், கிளென் மெக்ராத், அலன் டொனால்ட்.
12 ஆவது வீரர்: மைக்கல் பெவன்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’