வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 ஏப்ரல், 2011

இலங்கை கிரிக்கெட் சபையை சாடுகிறார் முரளிதரன்

வீ ரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை.

இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர் லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இங்கிலாந்து சுற்றுலாவுக்காக இந்திய பிரிமியர்லீக் போட்டிகளை (ஐ.பி.எல்) இடையில் கைவிட்டு தாயகம் திரும்ப வேண்டுமென இலங்கை வீரர்களை இலங்கைக் கிரிக்கெட் சபை வலியுறுத்தியுள்ளதை முத்தையா முரளிதரன் குறைகூறியுள்ளார்.
தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட முரளிதரனும் ஐ.பி.எல். போட்டிகளில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கூறுகையில்,

'வீரர்களுக்கு மே 20 ஆம் திகதிவரை (ஐ.பி.எல். போட்டிகளில்) விளையாட அனுமதி வழங்கப்பட்டது என நான் எண்ணுகிறேன். திடீரென இடையில் என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. இது இலங்கை கிரிக்கெட் சபையின் குற்றமாகும். ஏனெனில் வீரர்கள் மே 20 ஆம் திகதிவரை விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் அவர்கள் அதை மே 5 ஆம் திகதிக்கு மாற்றுவது தவறாகும்.
மே 5 ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளை இடையில் கைவிட்டு திரும்பினால் வீரர்களின் மனோதிடம் பாதிக்கப்படும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதை ஆரம்பத்திலேயே அறிவித்திருக்க வேண்டும். அப்போது ஐ.பி.எல். அணிகளும் ஏனையோரும் புரிந்துகொண்டிருப்பர்' என முரளிதரன் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் காரணமாக இரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளுக்கிடையில் எதிர்ப்பு நிலை ஏற்படலாம். இந்திய கிரிக்கெட் சபையை பகைத்துக் கொண்டால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு பெரும் நிதியிழப்பு ஏற்படலாம். ஏனெனில் இலங்கைக்கு இந்தியா சுற்றுலா மேற்கொள்ளும்போது அது மிக முக்கியமானதாகும். எனவும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவும் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
'உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் நாம் 25 மில்லியன் டொலர் கடனைக் கொண்டுள்ளோம். இந்தியாவை பகைத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இந்திய அணி வரும்போதுதான் எமக்கு பணம் கிடைக்கும்.
இப்பிரச்சினை தீர்க்கப்படக்கூடும். இருநாடுகளுக்கும் இடையில் இந்த மாதிரி விடயங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இறுதியில் நாம் இந்தியாவில் தங்கியிருக்க நேரிட்டது. என்ன நடக்கும் என எனக்குத் தெரியவில்லை' என முரளிதரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’