இலங்கையின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டியில் பங்கேற்க மாட்டார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக முத்தையா முரளிதரனுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓயவு தேவை என வைத்தியர்களின் ஆலோசனையின் காரணமாகவே அவர் இனி வரும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நியுஸிலாந்துக்கு எதிராக கயானாவில் இடம்பெற்ற போட்டிகளின் போதே இவரது வலது கால் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை அணியின் பிஸியோதரப்பி வைத்திய நிபுணர் ரொம்மி சிம்செக் தெரிவித்துள்ளார்.
பல சவால்களுக்கு மத்தியில் விளையாடி வரும் இலங்கை அணியின் இருபதுக்கு இருபது உலகக்கிண்ண போட்டிகளில் முரளிதரன் உப தலைவராக செயற்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’