வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 மே, 2010

திருமலை தொடர்பாடல் முகாமைத்துவப் பீட மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரிப்பு _

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் முகாமைத்துவப் பீடம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், தமக்கான அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரும் வரை கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாமையினால் தமது தேவைகளை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்போது ஏற்பட்ட தகராறுகளின் காரணமாக கடந்த 20 ஆம் திகதி பல்கலைக்கழகம் மூடப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27 ஆம் திகதி முகாமைத்துவப் பிரிவு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்பின்னர் தமது அடிப்படை தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து தரும் வரை பல்கலைக்கழகத்தின் கற்றல் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் தாம் விலகி இருப்பதாக மாணவர்கள் மீண்டும் தெரிவித்துள்ளனர். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’