வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 டிசம்பர், 2010

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை கைது செய்ய நடவடிக்கை

ராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள சுமார் 50 ஆயிரம் பேரைக் கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதன், 6 அக்டோபர், 2010

சிசுவை கொன்ற தாய் கைது

பிறந்து சில மணித்தியாலங்களேயான சிசுவொன்றை குத்தி கொலை செய்து சடலத்தை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்துவைத்த பெண்ணொருவரை சப்புகஸ்கந்த பொலஸார் இன்று கைது செய்துள்ளனர்.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

ஆர்ப்பாட்டக்காரருக்கு உதவியர் கைது

விளம்பரப் பதாகையின் மீதேறி நின்று, தற்கொலை செய்து கொள்ளப் செய்யப்போவதாக மிரட்டி வரும் நபருக்கும் பொலிஸாருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராக செயற்படுவதற்காக அந்த கம்பத்தின் மீதேறிய மற்றொரு நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

ஞாயிறு, 27 ஜூன், 2010

குற்றப்புலனாய்வு திணைக்கள பிரதம அதிகாரி கைது

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம அதிகாரியும் மற்றுமொரு நபரும் புத்தளம், முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய், 15 ஜூன், 2010

பல மில்லியன் ரூபாய் நிதி மோசடி; சந்தேகநபர் கம்பளையில் கைது

சட்டவிரோத நிதி நிறுவனத்தின் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கம்பளைப் பிரதேசத்திலிருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன், 28 ஏப்ரல், 2010

கொழும்பு தலைநகர் பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் கைது

பாடசாலைகளுக்கு அருகாமையில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை விற்பனை செய்து வந்த சிலர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

வட பகுதிக்குள் செல்ல முற்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது!

பிரான்ஸ் நாட்டுப் பிரஜையாகிய ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் போன்று போலியான கடிதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதன், 14 ஏப்ரல், 2010

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டோர் கைது! - பேருவளையில் சம்பவம்

சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட கும்பல் ஒன்றை பேருவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போலி சிகரெட் மீட்பு!

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட 40 இலட்சம் ரூபா பெறுமதியான போலி சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டிருப்பதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கலால் திணைக்களத்தின் சுப்ரின்டன் பிரபாத் ஜயவிக்கிரம தெரிவித்தார்.

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் போலி நாணயத் தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் போலி நாணயத் தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றுப் பிற்பகலில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

குறித்த நபரிடமிருந்து ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபரிடம் மதவாச்சிப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திங்கள், 5 ஏப்ரல், 2010

தமிழகத்தில் இருந்து இலங்கை வந்த அகதிகள் ஆறு பேர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி வந்த ஆறு இலங்கை அகதிகள் தனுஸ்கோடி பகுதியில் நான்காம் தீடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
உரிய முகாம் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் முகாமை விட்டு வெளியேறியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன், 31 மார்ச், 2010

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 11 இலங்கையர்கள் குவைத்தில் கைது

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 11 இலங்கையர்கள் குவைத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

திங்கள், 29 மார்ச், 2010

காலியில் ஆயுத உற்பத்தி சாலையை நடத்தி வந்த நபர் கைது

Loogix.com. Animated avatars. காலி பிரதேசத்தில் ஆயுத உற்பத்திச் சாலையொன்றை நடத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி ரத்கம பிரதேசத்தில் இந்த ஆயுத உற்பத்திச்சாலை இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளி, 26 மார்ச், 2010

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மதம் மாறிய பெண் கைது : நாட்டுக்குத் துரோகம் பண்ணியதாகப் புகார் _


பௌத்த சமயத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிய இலங்கைப் பெண்ணொருவர் நாட்டுக்கு எதிராகச் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

புதன், 10 மார்ச், 2010

பொட்டு அம்மானுடன் தொடர்புகளை பேணிய சுங்க உத்தியோகத்தர்கள் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுடன் தொடர்புகளைப் பேணிய இரண்டு சுங்க உத்தியோகத்தர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை காலப் பகுதியில் குறித்த இரு சந்தேக நபர்களும் பொட்டு அம்மானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

புதன், 3 மார்ச், 2010

மாணவர்களை தாக்கிய குற்றத்திற்காக பாடசாலை அதிபர் கைது


கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் உள்ள அரசாங்க பாடசாலையின் அதிபர் ஒருவர், தமது பாடசாலையில் பயிலும் ஐந்து மாணவர்களை தாக்கி அவர்களுக்கு காயம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட ஐந்து மாணவர்களும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மொரட்டுவ அங்குலான பொலிஸை சேர்ந்த இரண்டு பொலிஸார், இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர் தம்வசம் அடையாள அட்டையை கொண்டிருக்கவில்லை என்பதன் காரணமாகவே கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பொலிஸ் நிலையத்திலேயே பொலிஸாரால் தாக்கப்பட்டு இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 1 மார்ச், 2010

விடுதியில் குழப்பம் விளைவித்த இராணுவ மேஜர் விளக்கமறியலில்


பம்பலப்பிட்டி விடுதி ஒன்றில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள முயன்ற இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பலப்பிட்டியில் விடுதி ஒன்றில் விருந்து நிகழ்வின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
அவர் அங்கிருந்த விடுதியின் அதிகாரிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், சுமார் 5 லட்சம் பெறுமதியான சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி, மேஜர் ரஞ்சித்குமார என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று கல்கிஸை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், அவரை எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிடப்பட்டுள்ளார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

51வயதான அதிபர் மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் !!!


மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் பதுளை மாவட்டம் பண்டாரவளைப் பிரதேச பாடசாலையொன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பாடசாலையில் பத்தாம் தரத்தில் கல்வி பயில்கின்ற மாணவியொருவரே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த அதிபரால் இதற்கு முன்னர் 11ம் தரத்தைச் சேர்ந்த மாணவியொருவம் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மயக்கமருந்தை ஊசிமூலம் இந்த இரண்டு சிறுமியர்களுக்கும் ஏற்றி குறித்த அதிபர் தமது வீட்டில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். 51வயதான குறித்த அதிபர் பண்டாரவளை நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சனி, 13 பிப்ரவரி, 2010

தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கைது


வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில்,

"கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்" என்றார்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

புலிகளின் ஆயுத விநியோகஸ்தரான யாழ்.வாசி கைது.


இரு கொரிய நாட்டவர்களுடன் இணைந்து சீனாவிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கருணாகரன் என்ற நபரை இலங்கை குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்

கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட கருணாகரன் சீனாவிடமிருந்து புலிகளின் கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் அவரை தொடர்ந்து விசாரணை செய்து கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் நீதவானிடம் தெரிவித்த குற்றப்புலனாய்வு துறையினர் சந்தேகநபரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்கள். சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளித்த நீதவான் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.