வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஏப்ரல், 2010

தமிழகத்தில் இருந்து இலங்கை வந்த அகதிகள் ஆறு பேர் கைது

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி வந்த ஆறு இலங்கை அகதிகள் தனுஸ்கோடி பகுதியில் நான்காம் தீடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
உரிய முகாம் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் முகாமை விட்டு வெளியேறியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகள், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி மற்றும் பவானி ஆகிய முகாம்களில் இருந்து கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி தப்பி வந்துள்னர்.
அத்தடன் இராமேஸ்வரத்தில் வைத்து, இலங்கை வருவதற்கான படகு ஒன்றில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் படகில் ஏற்றி வந்தவர்கள் அவர்களை நான்காம் தீடையில் விட்டு, தலைமன்னார் என கூறி, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லலாம் எனவும் கூறி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’