வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 ஏப்ரல், 2010

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளைக் களைக்க பொலிஸார் முயற்சி _

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்த பௌத்த பிக்குகளைக் களைப்பதற்கு பொலிஸார் முயற்சி செய்து வருவதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
உண்ணா விரதத்தை முன்னிட்டு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பிக்குகள் அமைத்துள்ள தற்காலிக கூடாரங்களை நேற்று பொலிஸார் அகற்ற முற்பட்ட போதிலும், அவர்கள் உண்ணா விரதத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, இன்று பௌத்த பிக்குகளைக் களைப்பதற்குப் பொலிஸார் முயற்சி செய்து வருவதாக சற்று முன்னர் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் உண்ணாவிரதம் தொடரும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’