காலி பிரதேசத்தில் ஆயுத உற்பத்திச் சாலையொன்றை நடத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி ரத்கம பிரதேசத்தில் இந்த ஆயுத உற்பத்திச்சாலை இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆயுத உற்பத்திச் சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று ரிவோல்வர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தமக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த ஆயுத தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’