சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முற்பட்ட கும்பல் ஒன்றை பேருவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சட்டவிரோத படகில் சுமார் 45 பேர் பயணிக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பாசிக்குடா கடலிலிருந்து குறிப்பிட்ட படகு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 25 நாட்களுக்கு போதுமான உணவு மற்றும் நீர் போன்றவை குறித்த படகில் சேமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலியா புதிய நடைமுறைகளை அறிவித்து 24 மணித்தியாலங்கள் கடந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’