தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருகோண மலையில் கூடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவிருக்கின்றனர்.
கொழும்பில் கூடுவதற்கு முன்னதாக திருகோணமலையில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 18ஆம் திகதி கூடி ஆராய முன்னேற்பாடுகளைச் செய் துள்ளோம். அதுதொடர்பான விவரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற் றிரவு தெரிவித்தார்.எதிர்காலத்தில் கூட்டமைப்பு கடைப் பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், நடவ டிக்கைகள் தொடர்பாக எமது பிரதேசத்தில் கூடி ஆராய்வது நல்லது என்று முடிவு செய்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசாங் கத்திடம் இருந்து எதுவித அழைப்பும் நேற் றிரவு வரை தமக்குக் கிடைக்கவில்லை என்றும் சம்பந்தன் மேலும் கூறினார்














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’