அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த இந்த புதுவருடம் வழிகோலட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சித்திரைப் புதுவருடம் சிங்கள தமிழ் மக்களிடையே இன ஐக்கியத்தை வெளிப்படுத்தி நிற்கும் முக்கிய நிகழ்வாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியானதும் சுபீட்சமானதுமான முறையில் இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் கிட்ட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய வகையில் சமூகத்தில் சில செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தருணமாக தமிழ் சிங்களப் புதுவருடத்தை தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதயமாகும் புதுவருடம் இனங்களுக்கு இடையே சமாதானத்தை வியாபிக்கக் கூடிய ஓர் ஆண்டாக அமைய வேண்டுமென வேண்டுவதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’