சவுதி அரேபியாவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சவுதி அரேபியா ஜித்தா கந்தஹார் பாலத்திற்கு அடியில் தங்கியிருக்கும் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்
. இந்தோனேசிய பிரஜைகளுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் குறித்த இலங்கையர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் எல்.கே.ருஹ_ணுகே தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சவுதி அரேபிய பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’