வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

வட பகுதிக்குள் செல்ல முற்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் கைது!

பிரான்ஸ் நாட்டுப் பிரஜையாகிய ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் போன்று போலியான கடிதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ-9 வீதியூடாக வட பகுதிக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்பது தற்போதைய நடைமுறையாக உள்ள நிலையில் குறிப்பிட்ட இந்த வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் கடிதத்தை போன்று போலியாகத் தயார் செய்யப்பட்ட ஆவணம் ஒன்றைக் கொண்டு ஓமந்தை சோதனைச்சாவடியை கடந்து செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது.
வவுனியாவில் இருந்து முச்சக்கரவண்டியில் சென்ற போது கைது செய்யப்பட்டுள்ள இவர் புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’