யாழ்ப்பாணத்தில் கப்பம் கோரி கடத்தி வைக்கப்பட்டிருந்த இருவர் பொலிஸாரால் நேற்று விடுவிக்கப்பட்டதுடன் கடத்தலுடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் மூவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். மானிப்பாயைச் சேர்ந்த வாகன மின்பொறியியலாளர் ஒருவரும் வாகன திருத்துனர் ஒருவரும் கடந்த 20 ஆம் திகதி இனந்தெரியாத கும்பலொன்றினால் கப்பம் கோரி கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட சுப்பிரமணியம் மகேந்திரன் மற்றும் டி.மகேஸ்வரன் ஆகியோரை விடுவிப்பதாயின் 50 இலட்சம் ரூபா பணம் அல்லது 25 பவுண் நகையுடன் 25 இலட்சம் ரூபா பணத்தை கப்பமாகத் தர வேண்டுமெனவும் அக்கும்பல் கேட்டுள்ளது.
குடும்பத்தாரும் பொதுமக்களும் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் தீட்டிய திட்டத்தின் படி கப்பம் வழங்குவது போல சென்று யாழ் பொது மருத்துவமனைப் பகுதியில் சந்தேகநபர்கள் மூவரையும் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
-













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’