வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 ஏப்ரல், 2013

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற் படையினர் பலி



னந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் யாழ். அனலைதீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவர்: ஜனாதிபதி


டையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வூ நிலையத்தில் புனர்வாழ்வூக்கு உட்படுத்தப்பட்டு வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

வியாழன், 24 ஜனவரி, 2013

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை கண்காணிக்க யாழில் அலுவலகம் திறப்பு


புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் ஒன்று இன்று யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

செவ்வாய், 22 ஜனவரி, 2013

யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் இருவர் விடுதலை


புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

புதன், 26 டிசம்பர், 2012

முன்னாள் எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்கள் 45 பேர் கைது


மிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் 45 பேர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

யாழ். பல்கலைக்கழக மாணவி மர்மமான முறையில் மரணம்


யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் நேற்று மாலை மர்மமானமுறையில் உயிரிழந்துள்ளார்.

திங்கள், 10 டிசம்பர், 2012

வடபகுதி சட்டத்தரணிகள் 4 நாட்கள் பணிப்புறக்கணிப்பு


டபகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவியுமான சாந்தா அபிமன்ன சிங்கம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

யாழ். பல்கலை மாணவர் கைது விவகாரத்தில் பொலிஸ் தலையிட முடியாது: எஸ்.எஸ்.பி


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.

திங்கள், 3 டிசம்பர், 2012

யாழ். பல்கலை வளாகத்தை சுற்றியுள்ள காவலரண்களை உடன் நீக்க கோரிக்கை


ல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் இராணுவத்தினர் அத்துமீறி பிரவேசித்தமையும், 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறித்தும் நாளை யாழ். பல்நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாத்வீக ஜனநாயக வழியிலான போராட்டத்திற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று தெரிவித்தனர்.

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மொஹமட் ஜெப்ரி நியமனம்


யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

யாழ். பல்கலை வளாகத்தில் படையினர் குவிப்பு


யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான படையினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 26 நவம்பர், 2012

பாடசாலை மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் வல்லுறவு புரிந்த இளைஞன் கைது


ண்டத்தரிப்பைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோக செய்த அதே இடத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனையும் அவருக்கு உடந்தையாக இருந்த இருவரையும் யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற யாழ். யுவதி!


கடித்த பாம்பை பிடித்து, போத்தலில் அடைத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உள்ளார் யாழ்ப்பாண யுவதி ஒருவர். யாழ்ப்பாணத்தில் மிருசுவில் வடக்கை சேர்ந்தவர் பாலராஜா பாக்கியதேவி வயது 27. நேற்று முன் தினம் வைகறைப் பொழுதில் அரைத் தூக்கத்தில் இவர் இருந்து இருக்கின்றார்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

யாழ், கிளிநொச்சியில் காணி கோரும் இராணுவம்: யாழ்.பிராந்திய பணிப்பாளர்



யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார்.

சனி, 6 அக்டோபர், 2012

ஐ.நா உதவி செயலாளர் யாழ். விஜயம்



லங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் அஜெய சிப்பர் இன்று சனிக்கிழமை யாழ். மாவட்டத்திற்கான மேற்கொண்டார். இதன்போது யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

சனி, 1 செப்டம்பர், 2012

தாயையும் 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய தம்பதியர் யாழில் கைது



யா ழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

நிமலரூபன், டில்ருக்ஷனின் மரணங்களைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்



வுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து உயிரிழந்த கைதிகளான நிமலரூபன் மற்றும் டில்ருக்ஷனின் மரணங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

சனி, 21 ஜூலை, 2012

வீதியில் தவறவிடப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகுத்த இராணுவ வீரருக்கு பாராட்டு


பு த்தூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் வீதியில் தவறிவிட்ட பணத்தினை கண்டெடுத்து அதனை கட்டளைத் தளபதியின் ஊடாக யாழ் இராணுவத் தலைமையகத்திடம் ஒப்படைத்து, முன்மாதிரியாகச் செயற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துரசிங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளார்.

சனி, 14 ஜூலை, 2012

யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரதி பொலிஸ் மா அதிபர்


யாழ்.குடாநாட்டில் என்றும் இல்லாதவாறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டப்படுத்துவதற்கு சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ்.பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரதி பொலிஸ் மா அதிபர்


யாழ்.குடாநாட்டில் என்றும் இல்லாதவாறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டப்படுத்துவதற்கு சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ்.பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.