வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 அக்டோபர், 2012

ஐ.நா உதவி செயலாளர் யாழ். விஜயம்



லங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் அஜெய சிப்பர் இன்று சனிக்கிழமை யாழ். மாவட்டத்திற்கான மேற்கொண்டார். இதன்போது யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
யாழ். மாவட்டத்திற்கு இன்று காலை தந்த ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் தலைமையிலான குழுவினர் முதலில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சிவில் சமூக குழுக்களை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை யாழ். மாவட்ட செயலகத்தில சந்தித்தனர். இதன்போது, இக்குழுவினர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றம், கண்ணி வெடி அகற்றல் மற்றும் மீள்குடியேறிய மக்களிற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற உதவிகள் தொடர்பாகவும் கேட்டறிதாக யாழ். மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அத்துடன் மீள்குடியேற்றப்படும் மக்களின் வாழ்வாதார உதிவிகள் மற்றும் கட்டிடங்கள் புனரமைப்புக்கு ஐக்கிய நாடுகள் உதவிகளை வழங்கும் என அவர் உறுதியளித்துள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’