யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது விவகாரமானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயத்தில் பொலிஸார் தலையிட முடியாது என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெறும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, 'யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகள் தாம் கைது செய்யவில்லை என தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பான விளக்கம் என்ன?' என்று ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’