வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 7 டிசம்பர், 2012

வடக்கில் சிங்கள பரம்பலை விருத்தி செய்ய முயற்சி: சம்பந்தன் எம்.பி.


வடக்கில் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து வருகின்ற அரசாங்கம் அங்கு இராணுவக் குடும்பங்களை நிரந்தரமாகக் குடியேற்றி சிங்களக் குடிப்பரம்பலை விருத்தி செய்யவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம் சாட்டினார்.
ஐந்து இலட்சம் தமிழ் மக்களைக் கொண்ட வடக்கில் இராணுவத்தின் 15 படைப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் ஒன்றரை இரட்சம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த சம்பந்தன் எம்.பி புலிகளை அழித்து விட்டதாக யாரும் பெருமை பேசிக்கொள்ளக்கூடாது என்றும் மனித உரிமை பாதுகாக்கத் தவறியதன் காரணத்தினால் புலிகள் தமக்குத் தாமே அழிவினை ஏற்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதுடன் பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சம்பந்தன் எம்.பி மேலும் அங்கு உரையாற்றுகையில், தமிழ் மக்களைச் சார்ந்ததான தமிழீழ வழிடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியிலான போராட்டத்திற்கு நீண்டதொரு வரலாறே இருக்கின்றது. பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா உள்ளிட்ட ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் எமது நாடு இன்றைய அளவில் பாதுகாப்பினை எதிர்கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. தமிழர்களாகிய நாம் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். அகிம்சை வழிப்போராட்டங்களையும் சாத்வீக ரீதியிலான போராட்டங்களை நடத்திய போதிலும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’