வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 21 ஜூலை, 2012

வீதியில் தவறவிடப்பட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகுத்த இராணுவ வீரருக்கு பாராட்டு


பு த்தூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரால் வீதியில் தவறிவிட்ட பணத்தினை கண்டெடுத்து அதனை கட்டளைத் தளபதியின் ஊடாக யாழ் இராணுவத் தலைமையகத்திடம் ஒப்படைத்து, முன்மாதிரியாகச் செயற்பட்ட இராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துரசிங்கவினால் நேற்று வெள்ளிக்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இப்பெண் நகைகளை வங்கியில் அடகு வைத்து பெற்றுக் கொண்ட 41 ஆயிரம் ரூபா பணம் மற்றும் அதற்குரிய பற்றுக் சீட்டுக்களையும் வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் இதனை திருநெல்வேலி பகுதியில் தவறவிட்டுள்ளர். அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 5ஆவது இலங்கை காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த கோப்ரல் ஈ எம். டிக்கிரி பண்டா என்பவரால் குறித்த பெண்மணியின் பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய கைப்பையினை கண்டெடுத்து தனது கட்டளை அதிகாரி மூலமாக படையணித் தலைமையகத்தின் தளபதியிடம் கையளித்துள்ளார். இப்பணத்தையும் ஆவணங்களையும் யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க குறித்த பெண்மணியிடம் நேற்று வெள்ளிக்கிழமை கையளித்தார். அதேவேளை, இராணுவ வீரரின் இந்தச் செயலை பாராட்டி அவருக்கு யாழ் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பரிசையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’