யாழ்.குடாநாட்டில் என்றும் இல்லாதவாறு பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டப்படுத்துவதற்கு சமூக ஆவலர்கள் முன்வர வேண்டும் எனவும் யாழ்.பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். யாழ் பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் வீதிப்போக்கன் ஒருவரினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அவர் தற்போது யாழ். மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுன்னாகம், கட்டுவான் பகுதியில் 15 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும் தலமைறைவாகியுள்ளார். இவ்வாறாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் குற்றச்செயல்களும் தற்போது அதிகரித்தச் செல்கின்றன. யாழ். பிரவுண் வீதி மற்றும் ஓட்டுமடப் பகுதியில் வீடுகள் உடைக்கப்பட்டு வீட்டிலுள்ள பெறுமதியான உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளன. கண்ணாதிட்டிப் பகுதியில் வீட்டு கூரையைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி 2,74,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருடப்பட்டள்ளன. மாணிப்பாய் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர்களினால் பெண்களின் தங்கச் சங்கிலிகள் திருடப்பட்டுள்ளன. ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொலை செய்தவர் எனக் கருதப்படும் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிபோதை சம்பந்தமாக 4 வழக்குகளும். கஞ்சாவிற்பனை தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’