வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 ஜூன், 2010

பல மில்லியன் ரூபாய் நிதி மோசடி; சந்தேகநபர் கம்பளையில் கைது

சட்டவிரோத நிதி நிறுவனத்தின் ஊடாக பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கம்பளைப் பிரதேசத்திலிருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதிலும் 39 கிளைகளை நிறுவி அதன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
இந்நிலையில், கண்டி மற்றும் நுரெலியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களினால் விடுக்கப்பட்ட பிடியாணை உத்தரவின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இன்று இவர் பொலிஸாரால் கம்பளை நீதிவான் உபாலி குணவர்த்தன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’