இராணுவ வெற்றியை பிரபாகரனை அழித்ததற்கான கொண்டாடவில்லை. அல்லது விடுதலைப் புலிகளை முற்றாக ஒழிக்கப்பட்டமைக்காக அல்ல. நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டதை நினைவுபடுத்தித் தான் கொண்டாடுகிறோம் என இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராணுவப் பேச்சாளர், மழைகாரணமாக இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களை இம்மாதம் நடத்துவதென முடிவு செய்தோம். கொழும்பு காலி முகத்திடலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறுவுள்ள கொண்டாட்டங்களில் 9 ஆயிரம் இராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள்.
இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’