வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2010

இந்திய - இலங்கை மீனவர்கள் இடையில் சமரச பேச்சுவார்த்தை

மிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சனி, 13 மார்ச், 2010

சென்னையில் புதிய சட்டப் பேரவை கட்டிடம் இன்று திறப்பு

சென்னையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய சட்ட‌ப்பேரவை கட்டிடத்தை சோனியா காந்தி, முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று திறந்து வைக்கிறார்.

சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 12.11.2008 முதல் கட்டப்பட்டு வந்தது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட், புதிய சட்ட‌ப்பேரவையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி விரும்பினார்.

செவ்வாய், 9 மார்ச், 2010

அகதி முகாமைச் சேர்ந்த பெண் தற்கொலை-போலீஸார் மீது புகார்




கரூர்: கரூர் அருகே உள்ள இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை 3  போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த  2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற  சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்ததது.

இந்நிலையில் கரூர் எஸ்பியாக வந்த டாக்டர் தினகரன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் இலங்கை அகதி முகாம்மைச் சேர்ந்த குமார்,  பாண்டி, பாண்டி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மார்த் 7  ம் தேதி குமாரின் மனைவி பத்மாதேவியை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் அன்று மாலையே அவரை அவரது வீட்டில் விட்டுவிட்டனர்.

அப்போது வீட்டுக்குள் சென்ற  குமாரின் மனைவி பத்மாதேவி, தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.  உடல் முழுவதும் கருகிய நிலையில் அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ மனையில்  சேர்க்கப்பட்டுள்ளார்.

பத்மாதேவியை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழந்துள்ளது. இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணைச் செயலாளரும், வழக்கறிஞருகுமான புகழேந்தியும், குடியுரிமை பாதுகாப்பு நடுவம் மாவட்ட அமைப்பாளரும், வழக்கறிஞருமான முருகேசன் ஆகிய இருவரும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியாழன், 4 மார்ச், 2010

4 மாணவிகளை கற்பழித்த தலைமை ஆசிரியர்


நபரங்பூர்: ஒரிசாவில் பள்ளி மாணவிகள் நான்கு பேரை கற்பழித்த தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து 550 கி.மீ தொலைவில் கோஷம்குடா பகுதியில் போடா-அமடா சேவாஸ்ரம பள்ளி உள்ளது. மாணவர்கள் தங்கி படிக்கும் உண்டி-உறைவிடப் பள்ளி.

இங்கு 7 மற்றும் 8ம் வகுப்பில் படிக்கும் குறிப்பிட்ட சில மாணவிகளின் உடல் மற்றும் தோற்றத்தில் திடீர் மாற்றங்களை கவனித்த பள்ளி ஆசிரியை ஒருவர், இவர்களை தொடர்ந்து கண்காணித்தார்.

அந்த மாணவிகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உணர்ந்த ஆசிரியை இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பணியாளர்கள் சேர்ந்து இந்த மாணவிகளை தொடர்ந்து இரண்டு மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் பிரதீபா சாஹூ, துணை ஆசிரியர் ஈஸ்வர் போத்ரா, சமையல்கார பாத்மான் போத்ரா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மாநில கல்வி அமைச்சர் பிரதாப்ஜெனா உத்தரவிட்டுள்ளார்

செவ்வாய், 2 மார்ச், 2010

அண்ணாமலை பல்கலை வன்முறை-ஓடையில் மேலும் 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு


சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பயிலும் வட இந்திய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதையடு்த்து போலீசார் தடியடி நடத்தியதில் நேற்று ஒரு மாணவர் பாலத்தில் இருந்து விழுந்து பலியானார்.

இந் நிலையில் இன்று அந்தப் பாலத்தின் அடியில் உள்ள ஓடையில் இருந்து மேலும் இரு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் படித்து வந்த ஜார்கண்டை சேர்ந்த கௌதம் குமார் என்ற மாணவர் சாலை விபத்தில் படுகாயமடைந்து அண்ணாமலை மருத்துக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது நிலைமை மோசமானதால் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து அவருடன் படிக்கும் சக மாணவர்கள் 500 பேர், குறிப்பாக வட இந்திய மாணவர்கள், சரியான சிகிச்சை அளிக்காததால் தான் கௌதம் பலியானதாகக் கூறி, அண்ணாமலை மருத்துவக் கல்லூரியை சூறையாடினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர்.

அப்போது தப்பியோடிய மாணவர்களில் பிகாரை சேர்ந்த சுனித் குமார் என்பவர் பாலமான் ஓடையில் தவறி விழுந்து பலியானார்.

இதனால் பதற்றம் அதிகரிக்கவே பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியும் விடுதியும் மூடப்பட்டு மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் பாலமன் ஓடையில் இருந்து இன்று மேலும் 2 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மேலும் பதட்டம் அதிகரித்துள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களும் போலீஸ் தடியடியில் இருந்து தப்பியோடியபோது தவறி விழுந்து பலியானார்களா அல்லது வேறு வகையில் இறந்தார்களா என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

புலியின் கண்களில் சேறு வீசி தந்தையை காப்பாற்றிய மகன்


ஜார்காலி : சமயோசிதமாகச் செயல்பட்டு, புலியின் பிடியில் இருந்த தன் தந்தையைக் காப்பாற்றியுள்ளார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தாமு என்பவர். மேற்கு வங்கத்தில் சுந்தரவனக் காடுகள் புலிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இதன் முகத்துவாரத்தில் கும்பலாக படகுகளில் வந்து மீன் பிடிப்பது அப்பகுதி கிராமத்தவர்களின் வழக்கம்.

அதன்படி, ஒருநாள் ஜார்காலியிலுள்ள மூன்றாம் நம்பர் கிராமத்திலிருந்து நண்பகலில் ஜிதேன் மஜும்தார்(60) என்பவர் தன் மகன் தாமு (28)வுடன் புறப்பட்டு அருகிலுள்ள கெந்தோகாலி காட்டுக்கு படகில் சென்றார். அங்கு ஓர் இடத்தில் இருவரும் படகைக் கட்டி வைத்துவிட்டு, அன்று இரவு அங்கேயே தங்கினர். பின்பு நடந்ததை தாமு கூறுகிறார்: "மறுநாள் அதிகாலை 5 மணியிருக்கும். அடர்ந்த பனி; நான்கடி தூரத்தில் இருப்பது கூடத் தெரியவில்லை. திடீரென எனக்கு முன்பு உட்கார்ந்திருந்த தந்தை இருந்த இடத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது. சற்று கூர்ந்து பார்த்தேன்; அப்படியே திகைத்துப் போய்விட்டேன். என் தந்தையின் கழுத்தில் ஒரு காலையும், கைப்பகுதியில் ஒரு காலையும் வைத்தபடி ஒரு புலி உறுமிக் கொண்டிருந்தது. கையிலோ ஓர் ஆயுதமும் இல்லை; என் கையில் லத்தி மட்டும் இருந்தது. இருந்தாலும் தைரியம் தான் இல்லை. ஒருவழியாகச் சில வினாடிகளில் அசட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, என் கை நிறைய கீழே கிடந்த சகதியை அள்ளினேன். புலியின் முகத்தை நோக்கி வேகமாக வீசினேன்.'
அவ்வளவுதான், சகதி புலியின் கண்களில் விழுந்தது; புலி தன் பிடியிலிருந்து ஜிதேனை விட்டு விட்டு, வழி தெரியாமல் திகைத்து நின்றது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாமு, தந்தையை இழுத்து அருகிலிருந்த படகில் ஏற்றி, திரும்பிப் பார்க்காமல் வேக வேகமாக துடுப்புப் போட்டு வெளியே கொண்டு வந்து விட்டார். பின், படகில் இருந்த சில மூலிகைகளைக் கொண்டு தந்தையின் கழுத்தில் ஏற்பட்ட காயங்களில் மருந்து கட்டினார். ஊருக்குத் திரும்பியவுடன், அரசு மருத்துவமனையில் ஜிதேனைச் சேர்த்தார். "நாங்கள் எப்போதும் கும்பலாகத் தான் மீன் பிடிக்கச் செல்வோம். ஒருநாள், எங்கள் குழுவில் இருந்த ஒருவரைப் புலி தாக்கி காட்டுக்குள் இழுத்துச் சென்றதையடுத்து, ஜிதேன் எங்களுடன் வருவதை நிறுத்திவிட்டார்' என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

சனி, 27 பிப்ரவரி, 2010

ஓடும் ரயிலில் கழிவறையில் சிறுமி கொலை


விஜயவாடா: ஆந்திரா வில் ஓடும் ரயிலில் கழிவறையில் சிறுமி கொலை செய்யப்பட்டாள்.

செகந்திராபாத்தில் இருந்து கூடூருக்கு சென்ற சிம்மபுரி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் இந்தக் கொலை நடந்துள்ளது.

ரயில் விஜயவாடா அருகே சென்று கொண்டிருந்தபோது இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

15 வயது மதிக்கத்தக்க அந்தச் சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாள்.

இதைச் பார்த்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில்வே போலீசார் சிறுமியின் உடலை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அந்தச் சிறுமி யார் என்பது பற்றி விவரம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

காஷ்மீரில் 10 நாள் குழந்தை கொலை ; யார் பொறுப்பு ? சட்டசபையில் அமளி

ஸ்ரீநகர்: மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய கும்பல் ஒன்று தாயின் அரவணைப்பில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட, பிறந்து 10 நாளே ஆன பச்சிளம் குழந்தையை அடித்து கொலை செய்தது. அங்கு சட்ட ஒழுங்கு கெட்டு விட்டதையே இது காட்டுகிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த நிஷார்அகம்மது- குல்சுமா தம்பதியினரின் மகன் இர்பான் அகமது ( 10 நாள் பச்சிளம் குழந்தை) . இந்தக்குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது தொடர்பாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஒரு காரில் புறப்பட்டுள்ளார்.

அப்பபோது ஒரு வன்முறைக் கும்பல் காரில் பயணம் செய்தவர்களை கீழே இறக்கி அடித்துள்ளனர். இதில் குல்சுமா, தனது குழந்தையை தனது உடலோடு இணைத்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால் அந்த வன்முறைக்கும்பல் தாக்கியதில் குழந்தை மீது அடி விழுந்தது. இதில் குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் பீறிட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அங்கு குழந்தை இர்பான் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் துக்கம் தாங்காமால் தாய் குல்சுமா அழுது துடித்தார்.

இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும், மனித உரிமை மீறல் நடந்ததாகவும் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் குழந்தை கொலை தொடர்பாக அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்: 10 நாள் குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் காஷ்மீர் சட்டசபையில் எதிரொலித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதே காரணம் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுன. ஜனநாயக மக்கள் கட்சியினர் கடும் கூச்சலிட்டனர். மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாக கெட்டு போய்விட்டது. என கோஷம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கை நோக்கி செல்ல முற்பட்டனர். இவர்களை தடுப்பு காவலர்கள் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து எதிர்கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில் ; மாநிலத்தில் நடந்துள்ள குழந்தை பலிக்கு அரசே காரணம் என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள உமர் அப்துல்லா , குழந்தையை கொலை செய்தவர்களுக்கு எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என கூறியுள்ளார்.

சீக்கியர்கள் கொலைக்கு எதிர்ப்பு : பாகிஸ்தானில் 2 சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் தீ வைப்பு சம்பவமும் நடந்தது. சீக்கிய அமைப்பினர் பல இடங்களில் தலிபானுக்கு எதிரான வாசகம் அடங்கிய பேனருடன் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் வடக்கு காஷ்மீர் பகுதியில் சாப்பூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இருவரை பிடிக்க துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

தூங்கிய நர்ஸ்: இன்குபேட்டர் எரிந்து குழந்தை பலி.


நாக்பூர்: மருத்துவமனையில் பணியில் இருந்த நர்ஸ் தூங்கிய நிலையில், இன்குபேட்டர் தீப்பிடித்து எரிந்து குழந்தை பலியானது.

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூர் மருத்துவமனையில், பிறந்து நான்கு நாளே ஆன குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

எடை குறைவாக இருந்த இக்குழந்தை கடந்த 19 ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

குழந்தையை இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்க வேண்டிய நர்ஸ், வெப்ப நிலையை முறையாக கண்காணித்து மாற்றாமல், பணி நேரத்திலேயே தூங்கிவி்ட்டார்.

இதனால் இன்குபேட்டரில் வெப்பம் அதிகமாகி தீப்பிடித்தது. அதில் இருந்த குழந்தையும் உயிரோடு எரிந்துவிட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய் குமார் உத்தரவிட்டுள்ளார்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

விமானத்தில் வந்த துப்பாக்கி உதிரிபாகங்கள்: ஒருவர் கைது


சரக்கு விமானத்தில் வந்த துப்பாக்கி உதிரிபாக பார்சலை வாங்க வந்தவர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி உதிரிபாகங்கள் கடத்தல் தலைவன் உ.பி.க்கு தப்பியோடியது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பார்சலில் துப்பாக்கியில் பொருத்தப்படும் டெலஸ்கோப்கள், சைலன்சர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் இருந்தன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று பார்த்தபோது முகவரி போலியானது என்று தெரிந்தது. இதுபற்றி விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில், அந்த பார்சலை டெலிவரி எடுக்க நேற்று முன்தினம் மாலை சென்னை மண்ணடியை சேர்ந்த யூசுப் என்பவர் வந்தார். அவரை சுங்கத்துறை அதகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர், ‘‘நான் டெலிவரி எடுக்கவந்த கூலி ஆள். சீர்காழியை சேர்ந்த விஜயன் என்பவர்தான் பார்சலை டெலிவரி எடுத்து வரச் சொன்னார். இதில் என்ன இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது’’ என்றார். எனினும் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

பின்னர் சீர்காழிக்கு சென்று விசாரித்தனர். அங்கு விஜயன் இல்லை. அவர், உ.பி. மாநிலத்துக்கு தப்பியது தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க தனிப்படையினர் உ.பி மாநிலத்துக்கு விரைந்துள்ளனர். துப்பாக்கி கடத்தும் கும்பல் தலைவனாக விஜயன் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிடிபட்ட யூசுப்பிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இந்திய கலாசாரத்தை ஏற்றார் போலந்து மருமகள் : சென்னையில் இந்து முறைப்படி திருமணம்


சென்னை : இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்களால் கவரப்பட்ட போலந்து நாட்டு இளம் பெண், தமிழகத்தைச் சேர்ந்த வாலிபரை இந்து மத வழக்கப்படி திருமணம் செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், போடியை அடுத்த தேவாரத்தைச் சேர்ந்தவர் மோகன் தாஸ்; ஓய்வு பெற்ற வணிகவரித்துறை அலுவலர். இவரது மனைவி ஜெகதாம்பாள், ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் செந்தில் குமார்(30). இவர், இளங்கலை பொறியியல் படிப்பை இந்தியாவிலும், முதுகலை பொறியியல் படிப்பை ஜெர்மனியிலும் முடித்தவர். தற்போது, சுவிட்சர்லாந்து நாட்டில் மென்பொருள் மேம்பாட்டு இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் டாடூஸ் டோப்பியராலா. இவரது கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன. டோப்பியராலாவுக்கு மூன்று மகள், ஒரு மகன். இவரது இரண்டாவது மகள் அலெக்சாண்ட்ரா(27). எம்.ஏ., பட்டதாரியான இவர், அந்நாட்டின் நிதித்துறையில், நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
பணியின் போது கிடைக்கும் இடைவெளியில், செந்தில், இன்டர்நெட்டில், சாட் செய்வது வழக்கம். அப்படி செய்யும் போது அலெக்சாண்ட்ராவுக்கும், செந்திலுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக வளர்ந்தது. செந்திலுடன் பழகியதில், அலெக்சாண்ட்ராவுக்கு இந்திய கலாசாரம், பழக்க வழக்கங்கள், சாஸ்திர சம்பிரதாயங்கள் தெரியவர அது அவருக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. இதைத் தொடர்ந்து திருமணம் செய்தால், இந்து முறைப்படிதான் திருமணம் செய்வது என்று அலெக்சாண்ட்ரா பிடிவாதமாக இருந்துள்ளார். இதை செந்திலும் ஏற்றுக் கொண்டார். இவர்களது விருப்பம், இரு தரப்பு பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது. செந்திலின் பெற்றோர் போலந்து சென்று அலெக்சாண்ட்ராவின் வீடு, குடும்பம், சுற்றுப்புறச் சூழல்களை பார்த்துள்ளனர். அவர்களுக்கு பிடித்துப் போகவே, அலெக்சாண்ட்ரா குடும்பத்தினரை தமிழகத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு அழைத்தனர். அலெக்சாண்ட்ரா குடும்பத்தினருக்கும், தமிழக சூழல் பிடித்து விட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் உறவினர்களுடன் பேசி சென்னையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

செந்திலின் தாய் ஜெகதாம்பாள், மாதா அமிர்தானந்தமயி தேவியின் பக்தையாக இருந்ததால், விருகம்பாக்கம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள திருமண மண்டபத்திலேயே திருமணம் வைத்துக் கொள்ள விரும்பினார். அதன்படி, நேற்று அந்த மண்டபத்தில், புரோகிதர் மந்திரம் ஓத, மங்கல வாத்தியம் இசைக்க, உறவினர்களும், நண்பர்களும் சூழ்ந்திருக்க, அக்னி புகை எழும்ப, காலை 8.30 மணிக்கு தேவாங்க செட்டியார் முறைப்படி மணமகள் அலெக்சாண்ட்ரா கழுத்தில், மணமகன் செந்தில் தாலி கட்டினார். மணமக்களை அனைவரும் வாழ்த்தினர். போலந்து நாட்டில் இருந்து வந்திருந்த அலெக்சாண்ட்ராவின் உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். வெளிநாட்டில் பிறந்த பெண், இந்திய கலாசாரத்தால், கவரப்பட்டு இந்திய மருமகளானதை அறிந்த விருகம்பாக்கம் பகுதி மக்கள் அங்கு கூடி ஆச்சர்யமாக பார்த்து ரசித்தனர்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கார் உடைப்பு: அஜீத் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு


சென்னை: தனது காரை நடிகர் அஜீத்தின் தூண்டுதலின் பேரில் அவரது ஆட்கள் உடைத்துவிட்டதாகவும், இதில் அஜீத் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு ப் பதிவு செய்ய வேண்டும் என்றும் சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீசில் புகார் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் நடிகர் அஜீத்தின் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இல்லாத அஜீத் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என போலீசார் கூறிவிட்டனர்.

சினிமாவில் ஸ்டண்டு மாஸ்டராக உள்ள ஜாக்குவார் தங்கம் என்பவர் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து பேசினார். அப்போது கமிஷனரிடம் அவர் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அண்ணல் காந்தியடிகள் தெருவில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் சண்டை பயிற்சி கலைஞராகவும், ஸ்டண்டு மாஸ்டராகவும் பணி செய்து வருகிறேன். 18-ந் தேதி அன்று (நேற்று) அதிகாலை சுமார் 2 மணியளவில் என் வீட்டின் கதவை யாரோ சத்தமாக தட்டினார்கள்.

எனது மகனும், சினிமா கதாநாயகனுமான சிரஞ்சீவி கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வெளியில் சுமார் 15 நபர்களுக்கு மேல் கையில் பட்டா கத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல் குண்டு, கடப்பாறை போன்ற ஆயுதங்களோடு நின்றனர்.

நடிகர் அஜீத்தின் மானேஜர் தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர், அஜீத்தின் உதவியாளர், அஜீத் ரசிகர் மன்றத்தின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடியாட்கள் வெளியில் நின்றனர்.

உருட்டுக்கட்டையால் வீட்டின் ஜன்னல்களை அடித்து எனது சாதி பெயரையும் சொல்லி ஏளனமாக திட்டினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த என் மகன் கதவை திறக்காமல் வீட்டிற்குள் இருந்தபடியே செல்போனில் என்னிடம் பேசினான்.

நான் கதவை திறந்து வெளியில் வராதே, அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யட்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன்.

அந்த கும்பல் எனது வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த காரையும் உடைத்து சேதப்படுத்தி விட்டார்கள். சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். நீண்ட நேரம் அவர்கள் எனது வீட்டின் முன்பு நின்று என்னையும், எனது குடும்பத்தை பற்றியும் தாறுமாறாக திட்டி கோஷம் போட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நான் உடனடியாக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இந்த புகார் மனுவை கொடுக்கிறேன்.

சினிமாவில் நான் சேர்த்து வைத்திருந்த புகழை எல்லாம் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நண்பர் அஜீத்தின் நேரடி தூண்டுதலின் பேரில் அவருடைய மானேஜர், ரசிகர்மன்ற, தென் சென்னை மாவட்ட செயலாளர், அஜீத்தின் உதவியாளர் மற்றும் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அஜீத் ஏவி விட்ட ரவுடி கும்பலிடம் இருந்து என்னையும், எனது குடும்பத்தையும் காப்பாற்றுவது போலீசாரின் கடமையாகும். என்னையும், எனது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி விட்டு சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்..." என்று கூறியிருந்தார்.

14 பேர் மீது வழக்கு

இந்த மனுவை வாங்கி பதிவு செய்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தியாகராய நகர் துணை கமிஷனர் பெரியய்யாவை விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் மனுவையும் அவரது வீட்டையும், காரையும் சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்களையும் துணை கமிஷனர் பெரியய்யாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் படியும் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அஜீத் மீதும் அவரது மானேஜர் மற்றும் அடியாட்கள் மீதும் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அஜீத்தைக் கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் போலீசாரிடம் கூறிய ஜாகுவார் தங்கம், தனக்கு வேண்டப்பட்ட அரசியல்வாதிகள் மூலமும் இது தொடர்பாகப் பேசினார். இதனை அவரே நிருபர்களிடமும் கூறினார்.

அஜீத் மீது வழக்கு இல்லை!

இந்த நிலையில் அஜீத் மீது வழக்குப் பதிவு செய்து விட்டதாகவும், அவர் ஜாமீனில் கூட வெளிவரா முடியாதபடியான பிரிவுகளில் 8 வழக்குகள் பதிவு செய்துவிட்டதாகவும் ஜாகுவார் தங்கம் தரப்பில் செய்தி பரப்பப்பட்டது.

இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்த போது, "தங்கம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜீத்தின் மேனேஜர் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஜீத் சம்பவ இடத்தில் இல்லை என்பதால் அவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யவில்லை" என்றனர்.

15 வயது மாணவனுடன் ஓடிய ஆசிரியை!


ஹைதராபாத்: 15 வயதே ஆகும் மாணவனைக் காதலித்து அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி கல்யாணமும் செய்து கொண்ட 22 வயது ஆசிரியையால் ஆந்திரா வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் கோமட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ரம்யா (22). அனுமகொண்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவன் நாகேசுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. நாளாக நாளாக இது காதலாக மாறியது.

இவர்களது காதல் வீடுகளுக்குத் தெரிய வர இரு தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். இது முறையல்ல என்று கூறி காதலைத் தடுத்தனர்.

இந் நிலையில் கடந்த 15ம்தேதி ரம்யாவும், நாகேஷும் வீட்டை விட்டு வெளியேறினர். மறுநாள் யாதகிரி குட்டா பகுதியில் உள்ள நரசிம்மசாமி கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்தனர். பின்னர் மடி கொண்டா கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

இதையறிந்த நாகேஷின் உறவினர்கள் அங்கு சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று மடிகொண்டா போலீசில் சரணடைந்தனர்.

நாகேஷின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், 15 வயதே ஆன எங்களது மகன் நாகேஷை ஆசிரியை ரம்யா மயக்கி கெடுத்துவிட்டார். நல்லதைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை நஞ்சை விதைத்துள்ளார். மைனர் வயதுடைய என் மகனை கடத்தி திருமணம் செய்த ரம்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பின்னர் நாகேஷை அவனது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஆனால் நான் ரம்யாவுடன்தான் வாழ்வேன். எங்களை பிரித்தால் தற்கொலை செய்வேன் என்று மிரட்டினான். இருந்தாலும் விடாமல் காரில் ஏற்றி அவனை கூட்டிக் கொண்டு போய் விட்டனர் பெற்றோர்.

ரம்யாவும் கதறி அழுதார். நாகேஷை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாகேஷை என்னை விட்டு பிரித்தாலும், அவன் கட்டிய தாலியை நான் கழற்றமாட்டேன். கடைசி வரை என் கணவன் நாகேஷ்தான். அதை யாராலும் மாற்ற முடியாது.

நாகேசுக்கு 18 வயதானதும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். அவன் என்னைத் தவிர வேறு பெண்ணை திருமணம் செய்யமாட்டான். அதுவரை காத்திருப்பேன் என்று கூறியபடி சென்றார்.

புதன், 17 பிப்ரவரி, 2010

25 வயது நடிகை கற்பழிப்பு- 60 வயதைத் தாண்டிய இரு தொழிலதிபர்கள் கைது!


மும்பை: 60 வயதைத் தாண்டிய இரண்டு தொழிலதிபர்கள், 25 வயதான டிவி நடிகையை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை ஓஷிவாரா பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் ரேஷம்வாலா (60). இவருடைய நண்பர் சையத் ஆலிம்
(63). இருவரும் தொழிலதிபர்கள்.

இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் ஒரு டிவி நடிகையைக் கற்பழித்தாக கைதாகியுள்ளனர்.

இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா கூறுகையில், அந்த 25 வயது நடிகை சில மாதங்களுக்கு முன்பு மும்பை க்கு வந்தார். அங்கு தங்கி தொடர்களில் நடித்து வந்தார்.

இந்த இரு தொழிலதிபர்களிடமும் அப்பெண் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர்கள், டிவி தொடர்களில் பெரிய வேடங்கள் வாங்கிக் கொடுப்பதாகவும், நல்ல சம்பளம் பெற்றுத் தருவதாகவும், தங்க ஒரு நல்ல ஃபிளாட் தருவதாகவும் கூறியுள்ளனர்.

பின்னர் இதைக் கூறி அந்த இருவரும் நடிகையைக் கற்பழித்துள்ளனர். அதை படமாகவும் எடுத்துக் கொண்டனர்.

பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளான அப்பெண் உறுதியளித்தபடி ஃபிளாட் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இருவரும் ஏற்கனவே எடுத்து வைத்த அப்பெண்ணின் ஆபாசப் படத்தைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் புகார் கொடுத்ததன் பேரில் இருவரையும் கைது செய்தோம் என்றார்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப்ரவரி 19ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுப்பி கோர்ட் உத்தரவிட்டது.

காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை


நாகர்கோவில்:காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்தவர் மேள்சி தாஸ். இவரது மனைவி கனகம். இவர்களது மூத்த மகள் ஷர்மிலி. இவரது ஒரு தங்கையும், தம்பியும் சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஷர்மிலி எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையிலும் இரண்டு பேர் சுட்டுக் கொலை : போலீஸ் அதிரடியால் ரவுடிகள் கலக்கம்


மதுரை : மதுரை செக்-போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., மற்றும் ஏட்டை தாக்கி, பைக்கில் தப்ப முயன்ற, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்கள் கவியரசு,முருகன் ஆகியோரை, உதவி கமிஷனர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளின் அதிரடியால், ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த 8ம் தேதி கூட்டாளியுடன் திண்டுக்கல் பாண்டி, "என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், நேற்று இவர்கள் கொல்லப்பட்டனர். மதுரையில் சமீபத்தில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸ் எஸ்.ஐ., தென்னரசு (கீரைத்துறை குற்றப்பிரிவு), ஏட்டு கணேசன் (தெற்குவாசல் குற்றப்பிரிவு) ஆகியோர் நேற்று பகல் 12.15 மணிக்கு தெப்பக்குளம் செக்-போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு டவுன் உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை மற்றும் போலீசாரும் இருந்தனர்.
என்கவுண்டர்: சிலைமானில் இருந்து மதுரை நோக்கி பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரை, எஸ்.ஐ., தென்னரசு, ஏட்டு கணேசன் மறித்தனர். அவர்கள் பைக்கை நிறுத்துவது போல் போக்குக்காட்டி, எஸ்.ஐ., மற்றும் ஏட்டை கத்தியால் குத்தி விட்டு, தப்ப முயன்றனர். எஸ்.ஐ., மற்றும் ஏட்டு அலறல் சத்தம் கேட்டு, உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தார். பைக்கில் தப்ப முயன்ற இருவரையும் உதவி கமிஷனர், துப்பாக்கியால் சுட்டார். படுகாயமடைந்த இருவரையும், "108' ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் இருவரும் இறந்தனர். காயமடைந்த எஸ்.ஐ., மற்றும் ஏட்டை மற்றொரு ஆம்புலன்சில் அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பினர்.

டிஸ்மிஸ் ஏட்டு மகன்: சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியை சேர்ந்தவர் "டிஸ்மிஸ்' ஏட்டு மச்சக்காளை மகன் கவியரசு (32). இவரது நண்பர், மதுரை நரிமேட்டை சேர்ந்த ஆறுமுகம் சேர்வை மகன் முருகன் (எ) கல் மண்டையன் (35). இவர்கள் மீது தென்மாவட்ட அளவில் வழிப்பறி, கற்பழிப்பு, வீடு புகுந்து திருடுவது உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை குத்திவிட்டு, பைக்கில் தப்ப முயன்றபோது, அவர்களை உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை துப்பாக்கியால் சுட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது இறந்து உள்ளனர். அவர்கள் பயன்படுத்திய ஹீரோ ஹோண்டா (டி.என்., 64 7733) பைக்கும் திருடப்பட்டது தான். இது தொடர்பாக தெப்பக் குளத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

வெள்ளைதுரை பேட்டி: என்கவுன்டர் நடந்த இடத்தில் ஆர்.டி.ஓ., சுகுமார் விசாரணை மேற்கொண்டார். அவரிடம், உதவிக் கமிஷனர் வெள்ளைதுரை கூறியதாவது: வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., தென்னரசு, ஏட்டு கணேசன் ஆகியோரை, திருடர்கள் இருவரும் கண் இமைக்கும் நேரத்தில் பட்டாக்கத்தியால் குத்தினர். இதை பார்த்து பதறினேன். என் கண்முன்னே இரண்டு போலீசார் பலியாகி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், கைத்துப்பாக்கியால் இருவரையும் இரண்டு ரவுண்டு சுட்டேன். அவர்கள் உடலில் காயங்கள் எங்கெங்கு ஏற்பட்டன என தெரியவில்லை. உயிருடன் இருந்த அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினேன். இவ்வாறு வெள்ளைதுரை கூறினார்.

"சந்தன வீரப்பன் புகழ்' வெள்ளைதுரை: கவியரசு, திருட்டு வழக்குகளில் ஏற்கனவே கைதான போது, அவரது தந்தை ஏட்டு மச்சக்காளை பலமுறை காப்பாற்றினார். திருட்டு வழக்கில் தலையிட வேண்டாம் என, மச்சக்காளையிடம் போலீஸ் அதிகாரிகள் கூறியும் கேட்கவில்லை. இதனால், அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். முருகனும், கவியரசும் இணை பிரியாத நண்பர்கள். இருவரும் சேர்ந்து தான் வழிப்பறியில் ஈடுபடுவர். சந்தன வீரப்பன் என்கவுன்டருக்கு பின், இரட்டை பதவி உயர்வில் திண்டுக்கல் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் வெள்ளைதுரை. போலீசாருக்கு பலநாட்கள் போக்குகாட்டி, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி "செஞ்சுரி' போட்ட கவியரசுவும், முருகனும் தற்போது மதுரையில் உதவி கமிஷனராக உள்ள வெள்ளைதுரையின் தோட்டாக்களுக்கு இரையாகியுள்ளனர்.

சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட மாநில அரசு அனுமதி ‌தேவையில்லை : சுப்ரீம்கோர்ட் பரபரப்பு தீர்ப்பு


புதுடில்லி : மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட்டுகள் உத்தரவிடலாம் என சுப்ரீம்கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட வேண்டுமானால் அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியை பெறுவது இதுவரை மரபாக இருக்கிறது. இனிமேல், கோர்ட்டுகள் மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக மரபுக்காக கூட காத்திருக்காமல் தாங்களாகவே சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம் என சுப்ரீம் ‌கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டி சுப்ரீம் கோர்‌ட் இதை தெரிவித்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் : கோர்ட் சி.பி.ஐ., விசாரணைக்கு மாநில அரசிடம் ஆலோசிக்காமல் உத்தரவிடலாம் என தெரிவித்தனர். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கோர்ட் இம்மாதிரியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றனர். அதே சமயத்தில் அவ்வாறு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது கோர்ட் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் குடிமக்களின் அடிப்படை உரிமைய பாதுகாக்க கோர்ட்டுக்கு இது போன்ற உரிமைகள் அவசியம் என கருத்து தெரிவித்தனர்.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு


கோல்கட்டா: மேற்குவங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமில் நக்சல்கள் புகுந்து வெறித்தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் பலரை சுட்டு கொன்றனர். சிலரை எரித்து கொன்றனர். அத்தோடு இல்லாமல் அங்கிருந்த ஆயுதங்களையும் நக்சல்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த அசாத்தியமான துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியையொட்டியுள்ள பீகார், ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம், சட்டீஸ்கர் ஆகியபகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட் நக்சல்கள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை தந்து வருகின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிகாரிகளை கடத்தி சென்று கொலை செய்வது போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தீ வைப்பது , மற்றும் போலீஸ் இன்பார்மர்களை கொலை செய்வது இவர்களது முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது.

முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை : நக்சல்கள் அட்டூழியத்தை ஒடுக்க ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற பெயரில் ஒரு குழு அமைத்து செயல்பட ராணுவ வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிறப்பித்தார். இதன்படி ராணுவ வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆபரேஷனுக்கு நக்சல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சல்கள் 72 மணி நேர பந்த் அறிவித்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு பிரதமர் தலைமையில் நடந்த அந்நாளில் பல்வேறு தாக்குதல்களை நக்சல்கள் நடத்தினர். ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. முதல்வர்கள் மாநாட்டில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம், உள் து‌றை அமைச்சர் ப. சிதம்பரம் நக்சல்கள் கொட்டத்தை ஒழிக்க என்ன வழி என தனியாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை முடிந்த 6 நாளில் மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சில்தா என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் முகாம் மீது நக்சல்கள் இன்று அதிகாலை 5 .30 மணி அளவில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்று நடந்தது என்ன ? : இது குறித்து இப்பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் என்.எஸ். நிகாம் கூறியதாவது: இங்கு சுமார் 50 பேர் நக்சல்கள் 25 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இவர்கள் முகாம் உள்ளே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். வீரர்கள் தங்களுக்குரிய உணவு சமைத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளன. நக்சல்கள் கையில் இருந்த துப்பாக்கி மூலம் 5 பேரை சுட்டு கொன்றனர். பின்னர் தீ வைத்துள்ளனர். இதில் சிக்கி 9 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து அங்கிருந்த ஏ.கே.,47 ரக துப்பாக்கி உள்பட முக்கிய ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தூங்கும் போது தாக்குதல் நடத்துவதே நக்சல்கள் வழக்கம்: ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் சுமார் 25 பேர் இறந்து விட்டனர். மொத்தம் இந்த முகாமில் 51 பேர் இருந்துள்ளனர். எத்தனை பேர் காயமுற்றுள்ளனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவம் நடந்த பகுதிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். நக்சல்கள் தாக்குதல் எப்போதும் அதி‌காலை நேரத்திலேயே இருக்கும். அதாவது அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் , இதந்த தாக்குதலும் இன்று காலையில் தான் நடந்துள்ளது. இந்த நேரத்தில் வீரர்கள் பலர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சிலர் சமையல் செய்யும் பணியில் இருந்துள்ளனர். திடீரென வந்த நக்சல்கள் மொத்தமாக வந்த இவர்கள் கையெறி குண்டுகளை வீசியபடி முகாம் உள்ளே நுழைந்தனர். பின்னர் கையில் கிடைத்தவர்களை சுட்டு தள்ளினர். இந்த அதிரடி தாக்குதலில் படை வீரர்களால் எதிர் தாக்குதல் எதுவும் நடத்த முடியவில்லை.

நக்சல் ‌தலைவன் கொக்கரிப்பு : இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மாவோ., நக்சல்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து மாவோ., தலைவர் கிஷன்ஜி கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் சிதம்பரம் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மத்திய அரசு மனித நேயத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற இந்த நடவடிக்கைக்கு இந்த தாக்குதல் வழியாகத்தான் நாங்கள் பதில் சொல்வோம். இத்தாக்குதலும் அப்படித்தான். இன்னும் எங்கள் அதிரடி தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

புனேயில் குண்டுவெடிப்பு;9 பேர் பலி


மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள பிரபல ஜேர்மன் நாட்டு பேக்கரியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கோரேகான் பார்க் பகுதியில் உள்ள இந்த பேக்கரி நேற்று இரவு ஒரு பார்சல் கிடந்தது. அதை கடை ஊழியர் ஒருவர் எடுத்துப் பார்த்தபோது அதில் இருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.இதில் 9 பேர் உயிரிழந்தனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடித்த பேக்கரிக்கு அருகில்தான் யூத மையமான ஓஷோ ஆசிரமம் உள்ளது. இங்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வந்து போவது வழக்கம். எனவே இதைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெடிகுண்டுச் சம்பவம் குறித்து புனே பொலிஸ் கமிஷனர் சத்யபால் சிங் கூறுகையில், ஐந்து பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு புனே கண்டோன்மென்ட் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து சோதனைகளை மேற்கொண்டனர். அதேபோல தேசிய புலனாய்வு ஏஜென்சி, தீவிரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார், சிபிஐ, என்எஸ்ஜி படையினரும் விசாரணைக்கு விரைந்துள்ளனர்.

மேலும் மும்பையிலிருந்து போர்ஸ் ஒன் கமாண்டோப் படையினரும் புனே வந்துள்ளனர்.

மும்பைத் தாக்குதலுக்குப் பின் முதல் தாக்குதல்..

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பயங்கர தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அதற்குப் பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

குறிப்பாக உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்ற பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருந்தார். மேலும், உளவுத்துறையும் கூடுதல் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் தீவிரவாதத் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று புனேவில் தீவிரவாதிகள் கைவரிசையைக் காட்டியுள்ளது மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 மாதங்களில் நடந்துள்ள முதல் தீவிரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பில் பலியான 9 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படுவதாகவும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 ஆயிரம் வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறியுள்ளார்.

மும்பை -மகாராஷ்டிராவில் பாதுகாப்பு அதிகரிப்பு...

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் போலீஸாரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அசோக் சவான் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

"விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு டேவிட் ஹெட்லி வந்து போன பகுதிளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரக் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புனேவில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதையடுத்து தொடர்ந்து தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுதொடர்பாக மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பும் நிலவி வந்தது.இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று இப்போதைக்குத் தெரியவில்லை "என்றார்.

புனே சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், விமான நிலையம், மும்பை துறைமுகம், பாம்பே அணு மின் நிலையம், பங்குச் சந்தை கட்டடம், முக்கிய ரயில் நிலையங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், முக்கிய அரசு அலுவலக வளாகங்கள், தெற்கு மும்பையில் உள்ள விவிஐபிகள் அதிகம் வசிக்கும் பகுதிகள், கடற்கரைகள் உள்ளிட்டவை பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோல ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில், பந்தர்பூர் கோவில் உள்ளிட்ட முக்கிய தலங்கள், சுற்றுலாத் தலங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திங்கள், 8 பிப்ரவரி, 2010

வடக்குக் காஷ்மீரில் பனிச்சரிவு : 11 இராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு


வடக்குக் காஷ்மீர் கிலாங்மார்க் எனும் இடத்தில் இன்று பிற்பகலில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான இராணுவ வீரர்கள் பலியாகியிருப்பதாகக் கூறப்படுகின்றது. 11 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

400க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இப்பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.