.jpg)
சரக்கு விமானத்தில் வந்த துப்பாக்கி உதிரிபாக பார்சலை வாங்க வந்தவர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி உதிரிபாகங்கள் கடத்தல் தலைவன் உ.பி.க்கு தப்பியோடியது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பார்சலில் துப்பாக்கியில் பொருத்தப்படும் டெலஸ்கோப்கள், சைலன்சர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் இருந்தன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று பார்த்தபோது முகவரி போலியானது என்று தெரிந்தது. இதுபற்றி விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், அந்த பார்சலை டெலிவரி எடுக்க நேற்று முன்தினம் மாலை சென்னை மண்ணடியை சேர்ந்த யூசுப் என்பவர் வந்தார். அவரை சுங்கத்துறை அதகாரிகள் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், ‘‘நான் டெலிவரி எடுக்கவந்த கூலி ஆள். சீர்காழியை சேர்ந்த விஜயன் என்பவர்தான் பார்சலை டெலிவரி எடுத்து வரச் சொன்னார். இதில் என்ன இருக்கிறது என்றுகூட எனக்கு தெரியாது’’ என்றார். எனினும் அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
பின்னர் சீர்காழிக்கு சென்று விசாரித்தனர். அங்கு விஜயன் இல்லை. அவர், உ.பி. மாநிலத்துக்கு தப்பியது தெரியவந்தது. இதனால் அவரை பிடிக்க தனிப்படையினர் உ.பி மாநிலத்துக்கு விரைந்துள்ளனர். துப்பாக்கி கடத்தும் கும்பல் தலைவனாக விஜயன் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிடிபட்ட யூசுப்பிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’