-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 22 பிப்ரவரி, 2010
நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமாரன் நாளை அமெ.உச்சநீதிமன்றத்தில் வாதம்
விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கு ஒன்றில் நியூயோர்க் வாழ் இலங்கைத் தமிழரான விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்க நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை வாதாடவுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்றில் தமிழ் சட்டவாளர் ஒருவர் வாதாடுவது வரலாற்றில் இதுவே முதல் தடவை.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் தீவிரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டிருக்கும் அமைப்புக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு எதிராகவே அவர் வாதாடவுள்ளார்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் உதவி செய்வதற்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவுவதற்கும் இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கும்படி அவர் நீதிமன்றத்தில் வாதாடுவார்.
யார் தீவிரவாதிகள் என்பதை வரையறுப்பது கடினமானது என்பது பற்றியும், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்குவதையும் தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்திற்கோ ஆதரவளிப்பதையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்பது பற்றியும் அவர் வாதாடவுள்ளார்.
தற்போதுள்ள நடைமுறைகளின்படி, ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளவற்றுக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் அமெரிக்க தேசப்பற்றுச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தான் வரலாற்றில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் தோன்றவுள்ள முதல் ஈழத் தமிழ் சட்டவாளர் என்று மனித உரிமைகள் ஆணையக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றமே அமெரிக்காவில் உள்ள அதி உயர் நீதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’