வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை


நாகர்கோவில்:காதல் பிரச்னையில் கல்லூரி பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே சிதறாலை சேர்ந்தவர் மேள்சி தாஸ். இவரது மனைவி கனகம். இவர்களது மூத்த மகள் ஷர்மிலி. இவரது ஒரு தங்கையும், தம்பியும் சிறுவயதில் குளத்தில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இந்த அதிர்ச்சியில் மேள்சிதாஸ் இறந்து போனார். தாயின் பராமரிப்பில் வளர்ந்த ஷர்மிலி எம்.இ., படித்து முடித்தார். ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
ஷர்மிலியை அதே பகுதியை சேர்ந்த ஷாஜன் என்பவர் காதலித்தார். தினமும் பின்தொடர்ந்த ஷாஜனை, ஒரு கட்டத்தில் ஷர்மிலியும் விரும்பினார். எம்.பில்., முடித்து விட்டு பி.ஹெச்டி., படிப்பதாக ஷாஜன் கூறியுள்ளார். ஆனால், ஷாஜன் ஒரு ஏமாற்று பேர்வழி என்று தோழிகள் எச்சரித்ததை தொடர்ந்து, அவரது படித்த சான்றிதழை ஷர்மிலி கேட்டுள்ளார். இதனால், பயந்து போன ஷாஜன் சட்டப்படிப்பு படிப்பதாக கூறியுள்ளார்.முன்னுக்கு பின் முரணாக கூறியதால், ஷாஜனை உதறிய ஷர்மிலி தாயிடம் தனக்கு வேறு வரன் பார்க்கும்படி, கூறியுள்ளார். அவரை ஒருவர் பெண் பார்க்க வருவதை தெரிந்து கொண்ட ஷாஜன், வீட்டில் தாய் இல்லாத நேரத்தில் சென்று ஷர்மிலியை வெட்டி கொலை செய்தார். பின், மார்த்தாண்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் பேராசிரியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதறால் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’