வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகா கைது தொடர்பில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் சர்வதேச சதி முயற்சியாகும் - குணதாச அமரசேகர


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஓர் சர்வதேச சதித் திட்டமாகும் என தேசப் பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நூலக மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சர்வதேச சதித் திட்டம் தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியை பொறுப்பெற்றது முதல் ஆட்சியைக் கவிழ்க்க வல்லரசு நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பிரயத்தனம் மேற்கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமாறு வலியுயுறுத்தியே அமெரிக்கா சரத் பொன்சேகாவிற்கு கிறீன் கார்ட் வழங்கியதாக அவர் இதன்போது தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’