
நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை ஜனாதிபதியினால் கூட தடுத்து நிறுத்த முடியாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது மேற்கண்ட விடயங்களை தெரிவித்த அவர் நாட்டின் சட்ட திட்டங்கள் குறித்து உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் மட்டுமன்றி அண்டை நாடுகளிலும் இதே மாதிரியான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் உலக சமூகத்திற்கு போதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுடன் சட்டம் அமுல்படுத்தப்படுவதனை எந்தவொரு தலைவரினாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’