
ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இன்று மாலை நிச்சயதார்த்தம் நடக்கிறது.
ரஜினி மகள் சௌந்தர்யா திரைப்படத் தயாரிப்பாளராகவும், ஆக்கர் ஸ்டுடியோ என்ற போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். இவர் தயாரித்த முதல் படம் கோவா சமீபத்தில் வெளியானது.
சௌந்தர்யா ரஜினி க்கும் பிரபல தொழிலதிபர் ராம்குமார் மகன் அஸ்வின் ராம்குமாருக்கும் காதல் பூத்தது. இதனை அறிந்த அவர்களின் பெற்றோர் சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்தத் திருமணம் குறித்த அறிவிப்பை ரஜினி சமீபத்தில் வெளியிட்டார்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடக்கிறது.
விழாவுக்கு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு தரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணம் கருதி அனைவருக்கும் தரவில்லையாம். எனவே அனைவரும் பங்கேற்று வாழ்த்தும் வகையில் திருமணம் விமர்சையாக நடக்கும் என்று ரஜினி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’