
புதுடில்லி : மாநில அரசுகளுடன் ஆலோசிக்காமல் சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட்டுகள் உத்தரவிடலாம் என சுப்ரீம்கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. சி.பி.ஐ., விசாரணைக்கு கோர்ட் உத்தரவிட வேண்டுமானால் அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியை பெறுவது இதுவரை மரபாக இருக்கிறது. இனிமேல், கோர்ட்டுகள் மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக மரபுக்காக கூட காத்திருக்காமல் தாங்களாகவே சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை மேற்கோள் காட்டி சுப்ரீம் கோர்ட் இதை தெரிவித்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ., விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் : கோர்ட் சி.பி.ஐ., விசாரணைக்கு மாநில அரசிடம் ஆலோசிக்காமல் உத்தரவிடலாம் என தெரிவித்தனர். தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கோர்ட் இம்மாதிரியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றனர். அதே சமயத்தில் அவ்வாறு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடும் போது கோர்ட் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் குடிமக்களின் அடிப்படை உரிமைய பாதுகாக்க கோர்ட்டுக்கு இது போன்ற உரிமைகள் அவசியம் என கருத்து தெரிவித்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’