WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH,
WE WISH OUR PRESIDENT MAHINDA RAJAPAKSE GOOD HEALTH, STRENGTH, WILL POWER,
LOVING KINDNESS TO ACHIEVE HIS GOAL OF UNITED SRILANKA SWIFTLY AND EFFECTIVELY !
இ லங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை இழைத்த தவறுகளை ஆராய்வதற்கான மீளாய்வு 2013 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டிலேயே நிறைவு செய்யப்படும். என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.
காஸாவில் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அங்கு யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் பற்றிய ஐ.நா அறிக்கையை பெற்றுக்கொண்ட பான் கீ மூன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்காக உயர்மட்டக் குழுவொன்றை உடனடியாக நியமிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மோதலுக்கு வழிவகுத்த அடிப்படைக் காரணிகளுக்கான தீர்வு மேலும் தாமதமின்றி காணப்பட வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா. செய்திகள் தெரிவித்துள்ளது.
ஜ னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்குமிடையிலான முக்கியத் துவம் வாய்ந்த சந்திப்பு இன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறுகிறது.அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டின் ஓர் இடைவேளையின்போது இந்தச் சந்திப்பு இடம்பெறுமென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.இந்தச் சந்திப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல.
ஐ.நா. பொதுச்செயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுமாலை “சுடர் ஒளி”யிடம் தெரிவித்தார்.
பொ றுப்புக் கூறுதல் விடயமாகத் தான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
ஐ, ,நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் சொத்துக்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தமக்கு ஆலோசனை வழங்க ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கைக்குக் கடந்த வருடம் தாம் விஜயம் செய்திருந்தபோது கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களான அரசியல் தீர்வு, நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு இந்த வாரம் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்திக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற ஐநா அலுவலக அதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம் ஆலோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐநா அலுவலகதுக்கு முன்னால் நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஐநா செயலாளர்நாயகம் பான் கீ மூன் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாதென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற பிரிவினைவாத யுத்தத்தின் இறுதிக் கட்ட சம்பவங்கள் பற்றி பொறுப்பு சொல்லும் இலங்கையின் கடப்பாடு தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் குழுவில் இந்தோனேஷியர் ஒருவரும் ஒஸ்ரியர் ஒருவரும் இடம்பெறுகிறார்கள்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் பொறுப்புக் கூறும் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை விடயம் குறித்து ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பாக பாலித கொஹணவுக்கும், விஜய் நம்பியாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.