இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் பொறுப்புக் கூறும் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகள் பேணல் விவகாரத்தில் தமக்கு ஆலோசனை கூறுவதற்காக நிபுணர்கள் குழுவை அமைப்பதில் தாம் பின்நிற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமை அலுவலகத்தில் நேற்றுs சந்தித்த ஐ.நா.செயலாளர் நாயகம், செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அமைத்த ஆணைக்குழுவின் அடிப்படை குணாம்சங்கள் மற்றும் பங்களிப்பு பற்றி தமது நிபுணர்கள் குழு தமக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மனித உரிமை பேணல் தொடர்பாக பொறுப்பு சொல்லும் தன்மை குறித்து அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சர்வதேச தரங்கள், அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி நிபுணர்கள் தமக்கு ஆலோசனை கூறுவார்கள் என்றும் பான் கீ மூன் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தானாகவே ஆணைக்குழு ஒன்றை நியமித்திருப்பது உங்களுக்குத் தெரியும் என்று செயலாளர்நாயகம் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த ஆணைக்குழுவின் அடிப்படை குணாம்சங்கள், அதன் பங்களிப்பு ஆகியன பற்றி தமது நிபுணர்கள் குழு தமக்கு ஆலோசனை வழங்கும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தாம் சந்தித்த போது இடம்பெயர்ந்த மக்களின் நிலைமையில் முன்னேற்றம் காணுமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துமாறும் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தையும் அவர்களை ஒருங்கிணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தமாறும் தாம் அமைச்சர் பீரிஸிடம் கேட்டுக் கொண்டதாகவும் பான் கீ மூன் மேலும் கூறினார்.
இந்த விடயத்தில் இலங்கை சிறிது முன்னேற்றம் கண்டுள்ளதாக தாம் நினைப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், தேசிய நல்லிணக்கம், தேசிய நல்லிணக்கத்திற்காக வெவ்வேறு குழுக்களிலான மக்களை அணுகுதல் ஆகியன கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். மூன்றாவதாக, தாம் ஏற்கெனவே ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் பேசியது போல பொறுப்பு கூறும் தன்மையைப் பொறுத்த வரையில் அரசாங்கம் இயன்ற அளவு விரைவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இதற்கிடையில், அமைச்சர் பீரிஸ் இந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டன் உட்பட பல அமெரிக்க அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் . ___
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’