வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 ஜூன், 2011

இலங்கையின் பதிலுக்காக பான் கீ மூன் காத்திருப்பு

பொ றுப்புக் கூறுதல் விடயமாகத் தான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசவுள்ளதாகவும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலை இன்னும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

'நான் இலங்கை அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன். அவர்கள் பதிலை விரைவாக அனுப்பினால் அதனடிப்படையில் புது விடயங்களை நான் தெரிந்துகொள்ளக் கூடும்' என திங்கட்கிழமை நியூயோர்க்கில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் அவர் கூறினார்.
இதே கூட்டத்தில் தான் ஆசிய குழுவை சந்தித்ததாகவும் அவர்கள் இரண்டாம் தடவையும் தான், ஐ.நா. செயலாளர் நாயகமாக தெரியப்படுவதற்கு ஆதரவு வழங்குவதாகவும் கூறினார்.
'நிபுணர் குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளில் அநேகமானவை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாகும். இந்த நிபுணர் குழுவின் சிபாரிசுகளை பூரணமாக அமுல்படுத்த வைப்பதற்காக நான் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசுவேன்' என அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’