வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 மார்ச், 2011

ஐ.நா. செயலாளர் நாயகம் மீது கல்வீச்சு

ஐ.நாசெயலாளர் நாயகம் பான் கீ மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளளது.

கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கீ மூன் பங்குபற்றினார். அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்தபோது, லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கீ மூன் மீது கற்கள்வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரனா கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
எனினும் இதனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் அரபு லீக் தலைமையக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல நிர்பந்திக்கப்பட்டார். பின்னர் மற்றொரு வாசல் வழியாக கார் மூலம் அவர் வெளியேறினார்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவரை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய வைத்ததில் தஹ்ரிர் சதுக்கம் பெயர் பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’