வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அரசியல்தீர்வு,நல்லிணக்கத்தில் அக்கறை காட்டுமாறு ஐ.நா செயலாளர் வலியுறுத்து

லங்கைக்குக் கடந்த வருடம் தாம் விஜயம் செய்திருந்தபோது கைச்சாத்திடப்பட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களான அரசியல் தீர்வு, நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கேட்டுள்ளார்.

நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் செயலா ளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்துக் கலந்துரையாடியபோதே இதனை அவர் வலியுறுத்தினார்.
அரசியல் தீர்வுத் திட்டம், நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்குதல் போன்ற விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத் தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது அரசாங்கமும் ஐக்கிய நாடுகளும் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான இந்தச் சந்திப்பின் போது, பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தொடர்பில் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பான் கீ மூனின் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆணையை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவதுடன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் வழங்கிய ஆணையை பயன்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வுத் திட்டத்தையும் ஏற்படுத்த வேண்டுமென பான் கீ மூன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வடக்கில் அபிவிருத்தி மற்றும் கல்வி நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் அவர், பான் கீ மூனுக்கு விளக்கமளித்துள்ளார். அத்துடன் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன் போது விளக்கமளித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு நியமனம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க, தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கபட்ட குழுவானது இலங்கைக்கு எதிரானது அல்லவென்றும் குறிப் பிட்ட குழுவுக்கு அது தொடர்பில் ஆராயும் அதிகாரம் கூட வழங்கப்படவில்லை என்றும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் ஜனாதி பதியிடம் தெரிவித்ததாக வெளிவிவகார அமைச் சர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர்களு டனான சந்திப்பில் கூறியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’